)
2026 January Month Graha Peyarchi: 2026ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. 2026ஆம் ஆண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அந்த வகையில், ஜனவரி மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் தங்கள் நிலைகளை மாற்றுவார்கள். முதலில், ஜனவரி 14 அன்று, சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழைவார். அதன் பிறகு, கிரகங்களின் அதிபதியாகக் கருதப்படும் செவ்வாய் மகர ராசியில் சஞ்சரிப்பார். பின்னர், ஜனவரி 17ஆம் தேதி புதனும் மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
பின்னர், ஜனவரி 17 அன்று, புதனும் மகர ராசிக்குள் நுழைவார். இறுதியாக சுக்கிரனும் மகர ராக்குள் நுழைகிறார். இதனால் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. ஜனவரி மாதத்தில் நடக்கும் 4 கிரக பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளுக்கு தொழில், வேலை சிறப்பானதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்களின் சஞ்சரிப்பால் எந்த ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள் என்பது பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு நான்கு கிரக மாற்றங்கள் நிகழும் காலகட்டத்தில், வியாபார ரீதியாக சிறந்த பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு பெறுவீர்கள். வருமானமும் அதிகரிக்கும். கணவர் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். புதிய தொழில்களை தொடங்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும். மேலும், மாணவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.
ஜனவரி மாதத்தில் நான்கு கிரகங்களின் சஞ்சரிப்பின் போது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண சம்பந்தங்கள் வரலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக கிடப்பில் போட்டப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். எதை தொட்டாலும் உங்களுக்கு சாதகமாகவும், வெற்றியும் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். நிதி நிலைமை மேம்படும். வீடு, சொத்து வாங்குவதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலதிபர்கள் சில நல்ல ஒப்பந்தங்களைச் செய்ய வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும். உங்கள் உறவினர்களுடனான உறவுகள் மேம்படும்.
மகர ராசிக்காரர்களுக்கு 4 கிரகங்களின் சஞ்சாரத்தின் போது பல நன்மைகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், லக்ன ஸ்தானத்தில் கிரகங்களின் இயக்கம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் உங்கள் அனைத்து விஷயங்களின் கிடைக்கும். திட்டமிட்ட விஷயங்களை சரியாக முடித்து வெற்றி பெறுவீர்கள். நகை வாங்குவதற்கான வாங்கும் யோகம் உள்ளது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை கழிப்பீர்கள். திருமண தடைகள் நீங்கும். குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ