Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பிரத்யேகமான குணாதிசயங்கள் உள்ளன. புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிரார். அவர் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், தெளிவான சிந்தனை, அறிவாற்றல், வணிக சாதுர்யம், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றிம் காரணி கிரகமாக விளங்குகிறார்.
Budhan Nakshatra Peyarchi: புதன் நட்சத்திர பெயர்ச்சி
புதன், இன்று, டிசம்பர் 10, 2025 அன்று சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். இந்த நட்சத்திரத்தில் அவர் டிசம்பர் 20, 2025 அன்று காலை 6:13 மணி வரை இருப்பார். புதனின் இந்த பெயர்ச்சி இந்த மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
புதன் பெயர்ச்சி பலன்கள்
புதன் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய திட்டங்களை ஊக்குவிக்கும் என்றும், வணிகத்தில் முன்னேற்றம், வேலையில் வெற்றி ஆகியவற்றை தரும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இது மனிதர்களின் சிந்திக்கும் திறமையை ஆழமாக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சனி பகவான் அனுஷ நட்சத்திரத்தை ஆளும் கிரகம் என்பதால், சனியின் குணங்களான ஒழுக்கம், கடின உழைப்பு, செயல் சார்ந்த தன்மை மற்றும் நடைமுறை சிந்தனை ஆகியவை புதனின் செல்வாக்கின் கீழ் இன்னும் வலுவான முடிவுகளைத் தரும்.
சனியின் நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்களின் சிந்தனை தெளிவடையும். ஆழமான சிந்திக்கும் திறன் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் பல வித வெற்றிகளை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
விருச்சிகம் (Scorpio): வலுவான தன்னம்பிக்கை கிடைக்கும்
அனுஷ நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு வலுவான தன்னம்பிக்கையை அளிக்கும். பழைய திட்டங்கள் வேகம் பெறும். மேலும் வேலையின் நோக்கம் விரிவடையும் போது வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் பாராட்டு, பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகளைப் பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இந்த நேரம் நிதி வளர்ச்சி மற்றும் மூலோபாய முடிவுகளுக்கு சாதகமாக இருக்கும்.
மகரம் (Capricorn): வாழ்க்கையில் புதிய திசை, முன்னேற்றம்
மகர ராசிக்காரர்களுக்கு, புதன் நட்சத்திர பெயர்ச்சி அவர்களின் வாழ்க்கையில் புதிய திசையையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும். அவர்கள் வேலையில் சக ஊழியர்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெறுவார்கள். மேலும் முடிக்கப்படாத பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். புதன் பெயர்ச்சி காலத்தில் மகர ராசிக்காரர்களின் படைப்புத் திறன்கள் அதிகரிக்கும். மேலும் சமூகத்தில் போதுமான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் நிதி நிலைமையையும் வலுப்படுத்தும்.
கும்பம் (Aquarius): அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிட்டும்
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தால் அடுத்த 10 நாட்கள் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, வணிக லாபம் மற்றும் புதிய சாதனைகளுக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. புத்திசாலித்தனம், தலைமைத்துவ திறன்கள் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். மரியாதை மற்றும் கௌரவம் மேலோங்கும். மேலும் முந்தைய பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
புதன் அருள் பெற சொல்ல வேண்டிய புதன் காயத்ரி மந்திரம்
புத்திசாலித்தனம் அதிகரித்து, வாழ்வில் வெற்றிகளை பெற 'ரௌகிணேயாய வித்மஹே சந்த்ர புத்ராய தீமஹி தந்நோ: ஸெளம்ய ப்ரசோதயாத்' என்ற புதன் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராசிபலன்: கார்த்திகை 24 - இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ








