அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதபகவான் வரும் மே மாதம் 23ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்ல இருக்கிறார். சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி அடைவது ஜோதிட கண்ணோட்டத்தில் மிகவும் மங்களகரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சுக்கிரனும் புதனும் நட்பு கிரகம்.
ரிஷப ராசிக்கு செல்லும் புதன், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பெரும் வெற்றியையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றிற்கு காரணமா காரணமாக விளங்கும் நிலையில், வரும் மே மாதம் 23ஆம் தேதி, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்வதால், மிதுனம் கடகம் உள்ளிட்ட ஐந்து ராசிகள், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் அடைவார்கள் என்று ஜோதிடர்கள் (Astro Prediction) கணித்துள்ளனர்.
ரிஷப ராசிக்கு செல்லும் புதனால் பலனடையப் போகும் 5 ராசிகள்
மிதுன ராசிக்கான பெயர்ச்சி பலன்கள் (Gemini Zodiac Sign)
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிந்து, உங்கள் திட்டங்கள் வெற்றி பெற ஆரம்பிக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் ஏற்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல திட்டமிடலாம். பழைய சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனம் புத்துணர்ச்சி அடையும்.
கடக ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Cancer Zodiac Sign)
வருமானம் பெருகி பொருளாதார நிலை உயரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Leo Zodiac Sign)
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் திருப்தி இருக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் மனம் நாட்டம் பெறும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தெரிவிப்பார்கள்.
தனுசு ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Sagittarius Zodiac Sign)
வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். இப்போதைய வேலையிலும், பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.. எனினும் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. என் சாதனைகள் மூலம் மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படும். பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதனால் அனுகூலங்களும் ஏற்படும். எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாகவும் இருக்கும்.
கும்ப ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள் (Aquarius Zodiac Sign)
அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். உங்கள் வேலையில் தொழிலில் புதிய உயரத்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டு. உறவுகள் வலுவடையும். சுப காரியங்களுக்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பு ஏற்படும். முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். வீடு அல்லது மனை வாங்கும் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
மேலும் படிக்க | சனி தோஷம் விலக நவகிரகம் சுற்ற வேண்டிய 4 ராசிகள்..இதனால் நிம்மதியான வாழ்வு பெறலாம்!
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம், மகா பொற்காலம், ராஜயோகம் இந்த ராசிகளுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ