)
Chandra Grahan Date and Time in India: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகணங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
செப்டம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதனுடன் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் வரும். கிரகங்களின் இயக்கம் நாடு மற்றும் உலகத்துடன் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இன்னும் சில நாட்களில் இந்த அரிய வானியல் நிகழ்வு நடக்கவுள்ளது. ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் செப்டம்பரில் நிகழ உள்ளது. 7 செப்டம்பர் 2025 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணம் எப்போது தொடங்கும்? எப்போது முடிவடையும்? இதன் கால அளவு எவ்வளவு? இதன் விளைவு ராசிகளில் எப்படி இருக்கும்? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
Chandra Grahan 2025: 2025 ஆம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் எப்போது ஏற்படும்?
முதல் முழு சந்திர கிரகணம்
தேதி: செப்டம்பர் 7, 2025
எந்த நட்சத்திரத்தில் முழு சந்திர கிரகணம் நிகழும்: சதய நட்சத்திரம்.
எந்த ராசியில் முழு சந்திர கிரகணம் நிகழும்: கும்பம்.
Chandra Grahan 2025: 2025 ஆம் ஆண்டின் முழு சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?
பஞ்சாங்க கணக்கீடுகலின் படி, இந்த ஆண்டு முழு சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும். இது தவிர, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, இந்தியப் பெருங்கடல், ஐரோப்பா, கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய இடங்களிலும் இது தெரியும்.
Chandra Grahan 2025: 2025 முழு சந்திர கிரகணத்தின் நேர அட்டவணை
தொடக்க காலம்: இரவு 9:59
மத்திய காலம்: இரவு 11:43
மோக்ஷ காலம்: நள்ளிரவு 1:29
சூதக காலம் தொடங்கும் நேரம்: நள்ளிரவு 12:59 மணி முதல்
Chandra Grahan 2025: 2025 முழு சந்திர கிரகணத்தின் ராசிகளின் மீதான தாக்கம்
அசுப விளைவுகளை பெறப்போகும் ராசிகள்: மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம்
சுப விளைவுகளை பெறப்போகும் ராசிகள்: மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு
Chandra Grahan 2025: கிரகணத்தின் விதிகள் மற்றும் தானங்கள்
- ஜோதிடத்தில் கிரகணத்தின் சில விதிகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இதனுடன், இந்த நேரத்தில் தானம் செய்வதும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றால் அசுப பலன்களின் விளைவுகளை குறைக்க முடியும்.
- அசுப பலன்களின் தாக்கத்தில் உள்ள ராசிக்கார்கள் கிரகணத்தைக் காணக்கூடாது.
- கிரகணத்தின் அசுப பலன்களை நீக்க கடவுளை வழிபடுவது நல்லது.
- தான தர்மங்களை செய்யலாம்.
- கிரகணத்தின் அசுப விளைவுகள் நீங்க, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
கிரகண விதிகளிலிருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது?
ஜோதிடம் மற்றும் மத நூல்களின்படி, கிரகண காலத்தில் உணவு சமைக்கவோ உட்கொள்ளவோ கூடாது. ஆனால் இந்த நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு உட்கொள்ள விலக்கு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ