இந்து மதத்தில், பல வகையான விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டாலும், ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஏகாதசி விரதம் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் ஏற்றத்தை காணலாம் என்பது ஐதீகம். ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில் வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் வருதினி ஏகாதசி நன்னாளில், கஷ்டங்கள் அனைத்தையும் நீங்கி, வளமான வாழ்வைப் பெற உதவும் சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒரு வருடத்தில் 24 ஏகாதசி விரத நாட்கள் இருக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது. வைகாசி, தேய்பிறை அதாவது கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி திதியில், வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றும், சகல சவுபாக்யங்களையும் அடைந்து வளமான வாழ்வை வாழ்வார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது. வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி வருதினி ஏகாதசி என்று அழைக்கபடுகிறது.
இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி தேதி 23 மே 2025 அன்று அதிகாலை 01:12 மணிக்குத் தொடங்கி, அதே நாளில் இரவு 10:29 மணிக்கு முடிவடையும். இத்தகைய சூழ்நிலையில், உதயதிதியை அடிப்படையாகக் கொண்டு, இந்த முறை வருதினி ஏகாதசி 2025 மே 23 அன்று கொண்டாடப்படும்.
ஏகாதசி நாளில் இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும் சில பரிகாரங்கள்
ஏகாதசி நாளில் வாழ்க்கையின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கவும், வளமான வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறவும் உதவும் சில பரிகாரங்கள் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
1. துளசி-சாலிகிராம வழிபாடு: துளசி வழிபாடு இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது எதிர்பாராத கெட்ட காரியங்கள் நடக்காமல் நம்மைப் பாதுகாக்க உதவும். துளசி மற்றும் சாலக்கிராமத்தை வணங்குவதன் மூலம், நம் முன்னோர்கள் ஆசியையும் பரிபூரணமாக பெறலாம்.
2. தீபம் ஏற்றுதல்: ஏகாதசி நன்னாநாளில், அரச மரத்தின் கீழ் நெய்யில் தீபத்தை ஏற்றி வைத்து வணங்கினால், கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும். இது கெட்ட சக்தியிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
3. கோமதி சக்கர பரிகாரம்: வேலையில், தொழிலில் வியாபாரத்தில் நிலவும் பிரச்சனை நீங்க, வருதினி ஏகாதசியன்று 11 கோமதி சக்கரங்களையும் 3 சிறிய தேங்காய்களையும் பூஜிய அறையில் வைத்து, தீபம் ஏற்றி வணங்கவும். பூஜைக்குப் பிறகு, கோமதி சக்கரம் மற்றும் தேங்காயை ஒரு மஞ்சள் துணியில் கட்டி, அலுவலகம் அல்லது வியாபாரம் அல்லது தொழில் நடக்கும் பிரதான நுழைவாயிலில் தொங்கவிடவும். இந்த பரிகாரம் மூலம், வேலையில், தொழிலில் சந்தித்து வரும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
4. ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினசரி பூஜைகளுடன் கூடவே, உலகை காக்கும் மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனினும், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள், சுவாமிக்கு நிவேதனம் செய்த பழங்களை சாப்பிடலாம். அவ்வப்போது தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்கலாம்.
5. ஏகாதசி விரத்தின் மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு அருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவது மிகவும் சிறப்பு எங்கின்றன சாஸ்திரங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மேஷத்தில் அஸ்தமனமாகும் புதன்... குறையாத செல்வம், அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள்
மேலும் படிக்க | சனி ஜெயந்தி 2025... சனீஸ்வரன் அருளால் இன்னல்கள் நீங்கி இன்பம் பெறும் 3 ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ