ஜூன் மாதத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியன் தனது நட்பு கிரகத்தின் ராசியான மிதுன ராசியில் நுழைவார். இதனுடன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் தங்கள் ராசியை மாற்றுவார்கள். ஞானகாரகரான புதன் கிரகம் மாதத்தின் முதல் வாரத்தில், ஜூன் 6 ஆம் தேதி மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இதன் பிறகு, ஜூன் 7 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசியிலும், சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி மேஷ ராசியிலும் சஞ்சரிப்பார்.
ஜூன் மாதத்தில் நட்சத்திர பெயர்ச்சிகள் விபரம்
சூரியன் பெயர்ச்சி: ஜூன் 8 ஆம் தேதி சூரியன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார். ஜூன் 22, 2025 ஞாயிற்றுக்கிழமை திருவாதிரையில் நுழைவார்.
புதன் பெயர்ச்சி: ஜூன் 9 ஆம் தேதி திருவாதிரையில் புதன் பெயர்ச்சி ஆவார். பின்னர், ஜூன் 16 ஆம் தேதி புனர்வசு மற்றும் ஜூன் 25 ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 13 ஆம் தேதி பரணியில் பெயர்ச்சி மற்றும் ஜூன் 26 ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 7 ஆம் தேதி மகத்தில் பெயர்ச்சி மற்றும் ஜூன் 30 ஆம் தேதி பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி
குரு பெயர்ச்சி: ஜூன் 14 ஆம் தேதி திருவாதிரையில் பெயர்ச்சி மற்றும் ஜூன் 30 ஆம் தேதி பூரம் நட்சத்திரத்தில்
கிரகங்களின் ஜூன் மாத நட்சத்திரம் மற்றும் ராசி பெயர்ச்சியின் பலன்கள்
ஜூன் மாத பெயர்ச்சிகளால் நற்பலன்களைப் பெறும் ராசிகள்
ஜூன் மாதம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மிதுனம், கன்னி, தனுசு மற்றும் கும்பம். மிதுன ராசிக்காரர்கள் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் நல்ல பலன்களைப் பெறலாம். மறுபுறம், கன்னி ராசிக்காரர்கள் வேலையில், தொழில் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த ராசிக்காரர்கள் விரும்பிய இடத்தில் வேலை பெறலாம். தனுசு ராசிக்காரர்கள் புத்துணச்சியைப் பெற்று ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள், பணப் பலன்கள் மற்றும் பதவி உயர்வுகளைப் பெற முடியும். கும்ப ராசிக்காரர்களின் கெட்ட நேரம் முடிவுக்கு வந்து மன அமைதி கிடைக்கும். இது தவிர, துலாம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுமாரான பலன்களைக் கொடுப்பதாக இருக்கலாம்.
ஜூன் மாத பெயர்ச்சிகளால் கெடுபலன்களைப் பெறும் ராசிகள்
ஜூன்மாதம் 5 ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கலாம். மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் இந்த மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேஷ ராசிக்காரர்கள் இனம் தெரியாத பயத்தால் சூழப்படலாம். மேலும் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் எழும். ரிஷப ராசிக்காரர்கள் அவசரப்பட்டு வேலை அல்லது தொழில் தொடர்பான எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. கடக ராசிக்காரர்கள் அதிகப்படியான சிந்தனை மற்றும் குழப்பம் காரணமாக ஏற்கனவே செய்த வேலையை கெடுத்துவிடலாம். சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்புக்குப் பிறகுதான் தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றி பெறுவார்கள். மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் நிதி பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஆனி மாதத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்... அட்டகாசமான பலன்களை பெறும் 5 ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









