)
3 Rajyog In 2026 Lucky Zodiac Signs: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெறியில் தனது ராசியை மாற்றுகின்றனர். இதனால், சில ராஜயோகங்கள் உருவாகிறது. இதனால், குறிப்பிடட ராசிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று ராஜயோகங்கள் உருவாகிறது. அதாவது, கஜகேசரி யோகம், புதாதித்ய யோகம், சந்திர மங்கள யோகம் உருவாகிறது. இதன் 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சந்திரனும் குருவும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. சூரியனும் புதனும் இணைவதால் புதாதித்யா யோகம், சந்திரனும், செவ்வாய் இணைவதால், மங்கள யோகம் உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்த மூன்று யோகங்களும் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை மட்டுமே கொடுக்கின்றன. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
மூன்று ராஜயோகங்கள் உருவாவது ரிஷப ராசிகளுக்கு நன்மைகளை அள்ளி தரும். இந்த நேரத்தில் உங்கள் தொழில் மற்றும் வேலையில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைவீர்கள். 2026ஆம் ஆண்டில் உங்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு வரக்கூடும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். வேலையில் நேர்மறையான ஆற்றலையும் பெறுவீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட போட்டிகள் குறையும். புதிய வருமானத்தை கொண்டு வரும் வாய்ப்புகள் கிடைக்கும். துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஊதிய உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மங்களகரமான விஷயங்களக்கு உங்களுக்கு நடக்கும்.
கஜேகேசரி, புதாதித்ய யோகம் 7ஆம் வீட்டிலும், இந்த ராசியில் சந்திர மங்கள யோகம் உருவாகிறது. 2026ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். முதலீடு மூலம் அதிக லாபத்தை பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும. திடீர் நிதி ஆதாயங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார ரீதியாக உங்களை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகளக்கு இடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை போக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவி செய்கிறது. ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு சொத்து வாகனம் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளனத. சுப நிகழ்ச்சிகள் உங்கள் குடும்பத்தில் நடக்கும்.
2026ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கும்ப ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. கும்ப ராசியில் 5ஆம் வீட்டில் கஜகேசரி யோகமும், லாப ஸ்தானத்தில் இரண்டு யோகங்களும் உருவாகிறது. இந்த யோகம் முதலில் உங்கள் வீட்டில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் வீட்டில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். செல்வம் கூடும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் பெயர், புகழை கொண்டு வரும. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாம் கிடைக்கும். செய்யும் செலவுகளுக்கு அதிகமாக லாபம் கிடைக்கும். உங்கன் நிதி நிலைமை மேம்படும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். காதல் திருமணம் கைகூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
துலாம் ராசிக்கு பாக்ய வீட்டில் கஜேகேசரி யோகம் உருவாகிறது. மூன்றாவது வீட்டில் இரண்டு யோகங்கள் உருவாகிறது. இதன் காரணமாக, நிதி ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள். பொன், பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும. திருமண தடைகள் நீங்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். 2026ஆம் ஆண்டுக்குள் திருமண யோகம் உங்களுக்கு இருக்கிறது. வேலையில் உயர் பதவிகளை பெறுவீர்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ