Double RajaYogam In Capricorn: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. இதனால், 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கிரக பெயர்ச்சியால் ராஜயோகங்களும் உருவாகும். அந்த வகையில், மகர ராசியில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை கொண்டு வருகிறது. அதாவது, செவ்வாய் கிரங்களின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
மகர ராசியில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன் உள்ளனர். மகர ராசிக்குள் செவ்வாயும் நுழைகிறது. இதனால், மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது. திரிகிரக யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகிறது. மகர ராசியில் ஒரே நேரத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகுவது சுபமாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு நிகழ்வின் காரணமாக, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். மகர ராசியில் இரண்டு ராஜயோகங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது குறித்து பார்ப்போம்.
மேஷம் (Aries)
மேஷ ராசியில் 10ஆம் வீட்டில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகிறது. இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். எதிர்பாராத திருப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படக் கூடும். திடீர் நிதி ஆதாயங்கள், உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யும். பழைய கடன் அடைய வாய்ப்புள்ளது. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொட்டதெல்லாம் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கும். பல நாட்களாக திருமணம் முடிக்காமல் இருக்கும் நபர்களுக்கும், அவர்கள் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். தொழில் அல்லது உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
கடகம் (Cancer)
கடக ராசியின் 7வது வீட்டில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகிறது. இது கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனான உறவு மேம்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும. தொழிலில் எதிர்பாராத பலன்களை பெறுவீர்கள். தொழிலில் இரட்டை லாபத்தை பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வீட்டில் செல்வம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள். நினைத்த காரியங்களை திட்டமிட்டப்படி முடிப்பீர்கள்.
கன்னி (Virgin)
கன்னி ராசியில் 5ஆம் வீட்டில் இரண்டு ராஜயோங்கள் உருவாகிறது. இதன் காரணமாக, கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். தொழிலில் போட்டிக் குறையக் கூடும். தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி இருக்கும். காதல் திருமணங்கள், அடுத்த கட்டமான திருமணத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசியில் மூன்றாவது வீட்டில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகிறது. இது விருச்சிக ராசிக்காரர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சலை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் சகோதரர்கள், சகோதரிகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் வருமானம் கூடும். இதனால், உங்கள் வீட்டில் நிதி நிலைமை மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









