நவபஞ்ச யோகம்.! பிப்ரவரி 6 முதல் செல்வம், லாபத்தை குவிக்கும் 5 ராசிகள்.. பொற்காலம் ஆரம்பம்

Navpancham Yog 2026: இன்னும் இரண்டு தினங்களில் நவபஞ்ச யோகம் உருவாகிறது. இதனால், 5 ராசிகளின் வாழ்க்கையில் பல மாற்றங்களும் நல்ல விஷயங்களும் நடக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 

Written by - Umabarkavi K | Last Updated : Feb 4, 2026, 02:57 PM IST
நவபஞ்ச யோகம்.! பிப்ரவரி 6 முதல்  செல்வம், லாபத்தை குவிக்கும் 5 ராசிகள்.. பொற்காலம் ஆரம்பம்

Navpancham Yog 2026: ஜோதிடத்தின்படி, பல வகையான ராஜயோகங்கள் உருவாகும். ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியின்போது, ராஜயோகங்கள் உருவாகிறது. இதனால், 12 ராசிகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில்,  நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. நவபஞ்ச யோகம் செல்வம், புகழ், வெற்றியை குறிக்கிறது. இந்த யோகம் பிப்ரவரி 6ஆம் தேதி உருவாகிறது. 

Add Zee News as a Preferred Source

நவபஞ்ச யோகம்

அதாவது, பிப்ரவரி 6ஆம் தேதி சுக்கிரன் கும்பத்தில்  பெயர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில், மிதுன ராசியில் உள்ளார். எனவே, சுக்கிரன் கும்ப ராசியில் நுழைந்து, மிதுன ராசியில் உள்ள குருவுடன் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கிறார். குரு மற்றும் சுக்கிரன் என இரண்டு கிரகங்களும் நேர்மறையான ஆற்றலை தான் கொடுக்கும்.  எனவே,  இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து, நவபஞ்சம யோகத்தை உருவாக்குவது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்து காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.   இந்த ராஜயோகத்தால் தொழிலில் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். வேலை தொடர்பான விஷயத்தில் நல்ல செய்திகளை கேட்பீர்கள்.  முதலீடுகளை செய்ய சாதமான நேரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.  

மிதுனம் (Gemini)

நவபஞ்ச யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுககு நல்ல பலன்கள் கிடைக்கும். குருவின் நிலையும் வலுவாக இருப்பதால்,  மிதுன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால், உங்களது நிதி நிலைமை மேம்படும். பழைய கடன்களை அடைக்க அதிக வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து உங்களுக்கு நிதி ஆதாயங்கள் உண்டாகும். உங்களுக்கு வர வேண்டிய  கடன் பாக்கிகளும் வந்தடையும். பணியிடத்தில் பதவி உயர்வு பற்றி நல்ல செய்தியை கேட்பீர்கள். தொழிலதிபர் சிறந்த லாபத்தை பெறுவார்கள்.  மேலும், மாணவர்கள்  படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர் படிப்புக்காக வெளிநாடு செல்ல அதிக வாய்ப்புள்ளது. திருமண தடைகள் நீங்கும். விரைவில் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மிகழ்ச்சி நிறைந்திருக்கும்.

சிம்மம் (Leo)

நவபஞ்ச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்ளுக்கு சிறப்பு நன்மைகள் உண்டாகும. இந்த சுப யோகத்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வந்தடைவார்கள்.  பணியிடம், குடும்பத்தில் புகழ், வெற்றி அதிகரிக்கும். நவபஞ்சம யோகத்தின்போது, எதிர்பாராத நிதி நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது நிதி நிலைமையும் மேப்டும். தொழிலதிபர்களுக்கு சிறந்த லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் மூலம் அதிக லாபத்தை பார்க்க வாய்ப்புள்ளது. தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும். உங்களது  அனைத்து கடன்களும் தீரும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். 

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் பல வழிகளில் இருந்து நன்மை உண்டாகும. வேலைகளில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் சகோதரர், சகோதரிகளிடம் இருந்து பண விஷயத்தில் ஆதரவு கிடைக்கும். உங்கள் அனைத்து வேலைகளிலும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை கேட்பீர்கள்.  துலாம் ராசிகளுக்கு குருவின் அருளால் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திருமண வரன் அமைய வாய்ப்புள்ளது. 

கும்பம்  (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகத்தால்  பல நன்மைகள் கிடைக்கும். நவ பஞ்சம ராஜயோகத்தின் போது, ​​இந்த ராசிக்காரர் சிறப்பு பலன்களைப் பெறுவார்கள் இந்த காலக்கட்டத்தில்  நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும்.  உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா செல்வீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தியை கேட்பீர்கள். நகை, வீடு, சொத்து வாங்கும் யோகம் உள்ளது. நல்ல விலையில் உங்களுக்கு சொத்து விற்பனையாகும்.  இதன் மூலம், உங்களுக்கு இருந்த நிதி பிரச்னைகள் அனைத்தும் தீரும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.)

 

மேலும் படிக்க: 30 வருட காத்திருப்பு.. சனி வெறி ஆட்டம் ஆரம்பம், 3 ராசிகளுக்கு பொன்னான பொற்காலம்

 

மேலும் படிக்க: குபேர யோகம் ஜோதிட கணிப்புகள் .. வீட்டில் மகாலட்சுமி! இந்த 5 ராசிகள் செழிப்பை அடையும்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News