கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு பிப்ரவரியில் இருந்து கஷ்ட காலம், செலவு அதிகரிக்கும்!

Ketu Nakshatra Peyarchi:  ஜோதிடத்தில்படி, ஜனவரி 25ஆம் தேதி கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும், எதிர்மறையான ஆற்றலையும் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Jan 20, 2026, 12:51 PM IST
  • கேது நட்சத்திர பெயர்ச்சி
  • 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்
  • அதிர்ஷ்ட ராசிகள் யாரெல்லாம் தெரியுமா?
கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு பிப்ரவரியில் இருந்து கஷ்ட காலம், செலவு அதிகரிக்கும்!

Ketu Nakshatra Peyarchi: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. ஒன்பது கிரகங்களில் கேது மிகவும் மர்மமான கிரகமாக கருதப்படுகிறது. கேதுவின் பார்வை 12 ராசிளுக்கு முக்கியமாக கருதப்படுகிறது.  கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றி வருகிறது.  2026ஆம்  ஆண்டு கேது பெரும்பாலும் சிம்ம ராசியில் தான் இருப்பார். ஆனால், ஆண்டின் இறுதியில் டிசம்பர் 5ஆம் தேதி சிம்ம ராசியில்  இருந்து வெளியேறி, சந்திர கிரகத்தின் ராசியான கடகத்திற்கு செல்கிறார்.  

Add Zee News as a Preferred Source

இதற்கிடையில், கேது நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அதாவது, ஜனவரி 25ஆம தேதி கேது பூரம் நட்சத்திரத்தின் 2வது கட்டத்தில் இருந்து முதல் கட்டத்தில் பெயர்ச்சி அடைகிறார். கேது பூரம் நட்சத்திரத்தில் மார்ச் 29ஆம் தேதி வரை நீடிப்பார். இதன்பிறகு, கது மகர நட்சத்திற்கு செல்கிறார். கேது பகவானின் நட்சத்திர மாற்றமானது சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  குறிப்பாக, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் சில ராசிகளுக்கு கஷ்ட காலத்தையும் கொடுக்கும் என ஜோதிடததில் கூறப்பட்டுள்ளது.

கேதுவின் பெயர்ச்சியால் கஷ்ட காலத்தில் இருக்கும் 3 ராசிகள்

 மிதுனம் -  கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும். நீங்கள் உங்கள் வேலையில் தீவிரமாக உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் நிதி ரீதியாக சில கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இதனால், குடும்பத்தில் இருந்த வரும் கடன் பிரச்னைகள் மேலும் சிக்கலை கொடுக்கும். திருமண உறவில் சில மனஸ்தாபங்கள் ஏற்படக் கூடும். எனவே, பண விஷயத்திலும், வாய்மொழி உத்தரவாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

துலாம் - கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு சோதனையாக இருக்கும்.  மார்ச் மாதம் வரை அனைத்து விஷயத்திலும் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வேலை விஷயத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வேலை மாற்றுவதை பற்றி யோசிக்காமல் இருப்பது. மேலும், இந்த நேரத்தில் கடன்கள் யாருக்கும் தராமல் இருப்பது நல்லது. நிதி விஷயத்தில் உஷாராகவும் கவனமாக இருப்பது நல்லது. முதலீடு செய்யும் நிபுணர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்வது சிறந்தது. 

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு கேதுவின் பெயர்ச்சியால் கஷ்ட காலத்தை அனுபவிப்பார்கள். மார்ச் வரை உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், திடீர் செலவுகள் அதிகரிக்கும். மார்ச் மாதம் வரை தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும், பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் முதலீடு செய்யும்போது, கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்

ரிஷபம் (Taurus) - ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு கேதுவின் நட்சத்திர மாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுகக்கும்.  பல நாட்கள முடிக்காமல் கிடப்பில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நீட்டிக்கும். தொழிலிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். 

சிம்மம் (Leo) - சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றியை காண்பார்கள். தொழில் போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.   கூடுதல் வருமானம் கிடைக்கும். செய்யும் முதலீடுகள் உங்களுக்கு அதிகப்படியான வருமானத்தை கொண்டு வரும். 

விருச்சிகம் (Scorpio) - கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுககு பொற்காலத்தை கொண்டு வரும். அனைத்து விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். தொழில் வாழ்க்கையில் துணிச்சலான முடிவு எடுக்க சிறந்த மாதமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.)

 

மேலும் படிக்க | சூரியன் சனி சேர்க்கை! பிப்ரவரியில் இருந்து 4 ராசிகளுக்கு பொற்காலம்... யாரெல்லாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News