ராகு கேது உருவாக்கும் கால சர்ப்ப யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்.. தோஷம் நீங்கும்!

Rahu Ketu Kaal Sarp Yog 2026: ராகு கேது இணைந்து கால சர்ப்ப யோகத்தை உருவாக்குகிறது. இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Mar 14, 2026, 01:11 PM IST
  • கால சர்ப்ப யோகம்
  • ராகு கேது அருளால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
  • தோஷம் நீங்க என்ன செய்யலாம்?
ராகு கேது உருவாக்கும் கால சர்ப்ப யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்.. தோஷம் நீங்கும்!

Rahu Ketu Kaal Sarp Yog 2026: ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால  இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றனர். இதனால், 12  ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், சில கிரகங்களின்  நிலையால் அரிய யோகங்களும் உருவாகி வருகிறது. அந்த வகையில், ராகு கேது சேர்க்கையால் கால சர்ப்ப யோகம் உருவாகிறது.  ராகு மற்றும் கேது இடையேயான கிரகத்தால் கால சர்ப்ப யோகத்தை உருவாக்கியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

அனைத்து கிரகங்களும் ராகு  மற்றும் கேதுவுக்கு இடையில் வரும்போது,  அவை 180 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்படும்போது,  கால சர்ப்ப யோகத்தை உருவாக்குகிறது.  தற்போது கேது சிம்மத்தில் இருக்கிறார். மேலும், செவ்வாய், புதன், சூரியன் ராகுவுடன் கும்பத்தில் இருக்கிறார். சனி மற்றும் சுக்கிரன் மீனத்தில் இருக்கிறார். இந்த கிரகங்கள்  ராகு கேதுவுக்கு இடையில் வரும்போது கால சர்ப்ப யோகம் உருவாகிறது. இந்த யோகம் மார்ச் 26ஆம் தேதி நடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிகப்படியாக பலன்களை பெறுவார்கள்.  

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு கால சர்ப்ப யோகத்தால் அதிகப்படியான பலன்களை பெறுவார்கள். கால சர்ப்ப யோகத்தால் தொழிலில் குறிப்பிடத்தக்க பலன்களை பெறுவீர்கள். உங்கள் தொழில் பல குறிப்பிடத்தக்க பலன்களை பெறுவீர்கள். படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.  உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணமாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு ஏப்ரல் முதல் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும்.

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்களுக்கு கால சர்ப்ப யோகத்தால் நல்ல பலன்களை பெறுவார்கள். ராகு கேது அருளால் உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். நிதி நிலைமை மேம்படும். பணப் பிரச்னைகள் தீரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பாராட்டுகள், புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். உங்களுக்கு நிதி ரீதியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னைகள் தீரும். பல வழிகளில் இருந்து வருமானம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த தனிப்பட்ட பிரச்னைகள் தீரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.மேலும், உங்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். 

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் கால சர்ப்ப யோகத்தால் நல்ல பலன்களை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் பெரும். பல வழிகளில் இருந்து உங்களுக்கு செல்வம் வரக் கூடும். வருமானமும் உயரக் கூடும்.  புதிய தொழில் தொடங்க சாத்தியமான நேரமாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி சாத்தியமாகும்.  உயர்கல்வி கற்கும் உங்கள் கனவு நனவாகும். புதிய வேலை கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல செய்திகளை ஏப்ரலில் பெறுவார்கள். ஏப்ரல் மாதத்தில் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  

கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

கால சர்ப்ப தோஷத்தின் விளைவுகள் குறைக்க ஜோதிடத்தில் சில ராசிகள் கவனமகா இருக்க வேண்டும். கால சர்ப்ப தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட வேண்டும்.  திங்கள் கிழமை சிவன் கோயிலுக்கு சென்று தண்ணீர், பால், கருப்பு எள் ஆகியவற்றை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். ருத்ராபிஷேகம் செய்து கொள்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். உங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், நாசிக் அல்லது உஜ்ஜைன் போன்ற புனித தலங்களுக்கு சென்று  கால சர்ப்ப தோஷ சாந்தி பூஜை செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாசி 30 சனிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி பலன்கள்: 5 ராசிகளுக்கு கஷ்டகாலம், சும்மா இருந்தாகூட சிக்குவீங்க, ஜாக்கிரதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News