Shani Nakshatra Transit: ஜோதிடத்தின்படி, சனி பகவான் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். சனி நீதியின் அதிபதியாக கருதப்படுகிறார். சனி அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக பெயர்ச்சி அடையும் ராசியாகும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குள் நுழைய இரண்டரை ஆண்டுகள் ஆகும். அதனால் தான், 12 ராசிகளுக்கு சனியின் ஆசி மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில், சனி நட்சத்திரத்தையும் மாற்றி வருகிறது. இந்த நிலையில், சனி 27 ஆண்டுகளுக்கு பிறகு, தனது சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
இந்த மாற்றம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது, ஜனவரி 20ஆம் தேதி மதியம் 12.13 மணிக்கு சின உத்திரடாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். பிப்ரவரி 22ஆம் தேதி உத்திரடாதி நட்சத்திரத்தில் இருப்பார். இந்த நட்சத்திர மாற்றத்தின்படி, சனி குருவின் ராசியான மீனத்தில் இருப்பார். இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலை பெறுவார்கள். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.
மேஷம் (Aries)
சனி பகவான் உத்திரடாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையும்போது, மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, தொழில், பணம் விஷயத்தில் நஷ்டங்களை நீங்கள் சந்திக்கலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சில உடல்நலப் பிரச்னைகளை சந்திக்கலாம். நிதி ரீதியாக எதிர்மறையான பலன்கள் கிடைக்கும். எனவே, இந்த காலக்கட்டத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். மேலும், தேவையற்ற வாக்குவாதங்கள், தகராறில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வாய்மொழி உத்தரவாத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சில தடைகள் ஏற்படலாம். முதலீடு, தொழில் விஷயத்தில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. மேலும், உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்க, சனி பகவானின் கோவிலின் கடுகு எண்ணெய் மூலம் விளக்கேற்ற வேண்டும்.
சிம்மம் (Leo)
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு கடின உழைப்பிற்கு சில நேரங்களில் பலன் கிடைக்காமல் இருக்கலாம். நிதி இழப்புகள் ஏற்படலாம். இதனால், பெரிய முதலீடுகளில் இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது. பிப்ரவரிக்கு பிறகு முதலீட்டில் கவனம் செலுத்தலாம். மேலும், அலுவலகத்தில் அழுத்தம் உங்களுக்கு அதிகரிக்கலாம். உடல்நலம் தொடர்பாக பல சவால்கள் இருக்கும். எனவே, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். நெருங்கியவர்களுடன் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. சனி தோஷத்தில் இருந்து விலக, உங்களது திறனுக்கு ஏற்றவாறு, தானம் செய்ய வேண்டும்.
தனுசு (Sagittarius)
சனிப் பெயர்ச்சியின்போது தனுசு ராசிக்காரர்களுக்கு பல கவலைகள் இருக்கக் கூடும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் முதலீடு செய்வதற்கான நேரம் சாதகமாக இருக்காது. இந்த காலக்கட்டத்தில் கவனமாக சிந்தித்து எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். கடன் தொடர்பான சில சிக்கல்களை சந்திக்கலாம். பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சனி தோஷத்தை போக்க, ஹனுமன் மற்றும் சனி பகவானின் மந்திரங்களை தினமும் பூஜையின் போது சொல்ல வேண்டும். மேலும், சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தை அமாவாசை, ராசிபலன்: எந்தெந்த ராசிகளுக்கு லாபம்...? யார் யாருக்கு நஷ்டம்...?
மேலும் படிக்க | தை மாத ராசிபலன்: ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்.. பணத்தையும் குவிப்பார்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









