Four Planets Retrograde In March: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகங்களின் நகர்வுகள் ஒவ்வொன்றும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் இருக்கும். கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக்கொள்ளும். அதேபோல் வக்ர நிலையிலும் பயணிக்கும். இந்த வக்ர நிலையானது மனிதர்களுக்கு மோசமான பலன்களை கொடுக்கும்.
இந்த நிலையில், 4 கிரகங்கள் வக்கிர நிலையை அடைய இருக்கிறது. ஒரு அரிய கிரக நிலையானது இந்த மாதத்தில் நிகழ உள்ளது. அதாவது ஒரே வேளையில் 4 சக்தி வாய்ந்த கிரகங்கள் வக்ர நிலையை அடைய போகின்றன. ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்கள் வக்ர நிலையை அடைகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத மோசமான விளையவுகளை சந்திக்க இருக்கின்றனர். அப்படி 4 கிரகங்கள் வக்ர நிலையை அடைவதால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
நான்கு கிரகங்கள் வக்ர நிலையை அடைவது கடக ராசிக்காரர்களுக்கு ஆபத்தான பலன்களை வழங்க இருக்கிறது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் மன அழுத்தமானது அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் தவறான புரிதல்லால் பிரச்சனை ஏற்படக்கூடும். செலவுகள் கையை மீறு போகும். பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். தொழிலில் நஷடம் இருக்கும்.
விருச்சிகம்
நான்கு கிரகங்கள் வக்ர நிலையை அடைவது விருச்சிக ராசிக்காரர்கள் பல சவால்களை எதிர்கொள்ளவார்கள். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பணம் ரீதியாக பிரச்சனை ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய் விடும். செலவுகளை அதிகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மீனம்
இம்மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்கள் வக்ர நிலையை அடைவதால், மீன ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தோல்வியடையும். தொழில் விஷயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க கூடும். எந்த ஒரு பெரிய முடிவுகளையும் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுத்தால் அது பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேலும் படிக்க: NDA கூட்டணியில் சசிகலா? அமித்ஷாவுடன் ஆலோசனை.. இபிஎஸ் பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









