)
Ganesh Chaturthi 2025: விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். விநாயகரை நாம் மொத்தம் 51 வடிவ சிலைகளை வழிபட்டு வருகிறோம். மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட ஒவ்வொரு ஆண்டு வரும் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியம் வாய்ந்தது. விநாயகர் இந்த நாளில் பிறந்தார் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுகிறது. 10 நாள் விநாயகர் விழா இந்த விநாயகர் சதுர்த்தியிலிருந்தே தொடங்குகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் கணபதி சிலையை நிறுவி வழிப்படுவார்கள். பிள்ளையாரை ஸ்தபனத்திற்காக பெரிய அளவிலான அலங்காரங்கள் செய்யப்படும். பெரிய பந்தல்கள் அமைக்கப்படும்.
இந்நிலையல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எந்த நாளில், எந்த நேரத்தில் நிகழ்கிறது. எப்போது விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும், எப்போது பூஜை செய்ய வேண்டும், என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம் எது?
நீங்கள் விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால் ஆகஸ்ட் 26ம் தேதியன்று மாலை 04.50 முதல் 05.50 வரை அல்லது
மாலை 06.30 முதல் இரவு 08.30 வரையிலான நேரத்தில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வரலாம்.
விநாயகர் சதுர்த்தி தேதி 2025
2025 ஆம் ஆண்டில், விநாயகர் சதுர்த்தி திதி இன்று அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் 1:54 மணி முதல் தொடங்குகிறது. விநாயகர் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 3:44 மணிக்கு நிறைவடைகிறது.
விநாயகர் சிலை ஸ்தாபனம் 2025 பூஜை நேரம்
விநாயகர் பிரதிஷ்டை செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் நண்பகல் 12 மணியாகக் கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், விநாயகர் பிரதிஷ்டை செய்வதற்கான உகந்த நேரம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 11:05 மணி முதல் பிற்பகல் 01:40 மணி வரை இருக்கும்.
விநாயகர் பிரதிஷ்டைக்கு தேவையான பூஜைப் பொருட்கள்
விநாயகர் வழிபாட்டிற்கு, விநாயகர் சிலை களிமண், தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றால் இருக்க வேண்டும். விநாயகர் இருக்கை, இருக்கையில் விரிக்க மஞ்சள் அல்லது சிவப்பு துணி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, கிராம்பு, சிவப்பு துணி, பூணூல், கற்பூரம், விளக்கு, தூபம், பஞ்சாத்திரம், பழங்கள், கலசம், தேங்காய், சந்தனம், கொழுக்கட்டை, தயிர், தேன், பசு நெய், விநாயகருக்கு மலர் மாலை, வாழை இலை, தீப திரி, வெள்ளி நாணயம் தேவைப்படும்.
நைவேத்திய பொருட்கள்:
சுண்டல், கொழுக்கட்டை, சாம்பார், சாதம், பாயசம், வடை போன்றவற்றை நைவேத்தியத்திற்காக வைத்திருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ