புதுடெல்லி: இந்து மதத்தில், பெளர்ணமி நாளுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதிலும் புரட்டாசி மாத அமாவாசையைப் போன்றே, இம்மாதத்தில் வரும் பவுர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நதியில் நீராடுதல், தியானம் செய்தல், பிறருக்கு உதவி செய்வது என ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. புரட்டாசி மாத பௌர்ணமி தினமான இன்று (அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை), பௌர்ணமி பூஜை செய்வதும், விரதம் இருப்பதும் உடலுக்கும் வாழ்க்கைக்கும் நல்லது. விரதம் இருப்பவர்கள், இரவில் நிலவு வானில் தோன்றும்போது பூஜை செய்யும்போது பாயசத்தை நிவேதனம் செய்வது விரதத்திற்கான முழுப்பலனையும் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெளர்ணமி திதி ஆரம்பம்: 9 அக்டோபர் 2022, ஞாயிறு காலை 03:41 am
பெளர்ணமி திதி நிறைவு: 10 அக்டோபர் 2022, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02:25 வரை


மேலும் படிக்க | பெளர்ணமி தினத்தின் முக்கியத்துவம் என்ன? 


இந்த நாளில் இரண்டு சுப யோகங்கள் உருவாகும்
பௌர்ணமி நாளான இன்று உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரம் இருப்பதால் சுஸ்த்திர, வர்த்தமான் என்ற இரண்டு சுப யோகங்கள் உருவாகின்றன. இது தவிர துருவ யோகமும் இந்நாளில் ஏற்படுகிறது.


பெளர்ணமி நாளில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், எட்டுத்திக்கும் அதன் ஒளியால் பிரகாசிக்கின்றன, இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்கினால், அவரது பூரண கடாட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது, எனவே இந்த நாளில் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வணங்குவது வாழ்வில் வளம் சேர்க்கும். அனைத்து விருப்பங்களையும் கொண்டுவருகிறது, அதே நேரத்தில், நபர் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்.



புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி நாளில் விரதம் அனுஷ்டித்து வழிபாடு செய்வதால் எல்லாவிதமான பிரச்சனைகளும் தீரும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இன்று உருவாகும் சந்திரனின் கதிர்கள் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகவும், அவை அனைத்து கடுமையான நோய்களையும் குணமாக்கும் என்றும் கூறப்படுகிறது.  


மேலும் படிக்க | இன்றைய பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 20


திரிக்ரஹி யோகம் 
திரிகிரஹி யோகம் உருவாகும் இன்று சம்பந்தப்பட்ட ராசிகளை சேர்ந்தவர்களுக்கு நன்மைகள் நடக்கும். இன்று, கன்னி ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் இணைவதால், ராஜயோகம் என்றும் த்ரிகிரஹி யோகம் என்றும் சொல்லப்படும் அதிர்ஷ்ட நல்வாய்ப்பு ஏற்படும்.


புராணங்களின்படி, கிருஷ்ணர் கோபியர்களுடன் ராசலீலை செய்தார் என்பதால், வைணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமானது.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை) 


மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம், தொட்டது துலங்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ