சூரிய குடும்பத்தின் கிரகங்களின் நிலைகள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகங்ளுக்கும் நமது வாழ்க்கையின் சில அம்சங்களுடன், தொடர்பு உள்ளது. ராசி மாற்றங்கள், இந்த கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. சுக்ரன் கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். இந்த கிரகம் அசுப நிலையில் இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் வறுமையில் வாழும் நிலை ஏற்படும். அதோடு, அவரது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை கூட நன்றாக இருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் கிரகத்தின் நிலை சாதகமாக இருக்கும்போது அன்னை மகாலக்ஷ்மியின்ஆசி முழுமையாக கிடைக்கும். சுக்கிரன் அசுபமாக இருக்கும்போது, ​​ஒரு நபர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் அக்டோபர் 18-ம் தேதி சுக்கிரன் ராசி மாறப் போகிறார். சுக்கிரன் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். சுக்கிரனின்  இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். 


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்ரனின் பெயர்ச்சி அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். சுக்கிரனின் சஞ்சாரத்தின் போது, ​​தொழிலில், வேலையில் இருப்பவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வருமானமும் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.  நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


தனுசு: தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் வருமானம் அதிகரிக்கும். பங்குச் சந்தை, ஊக வணிகம் அல்லது லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்


கன்னி: துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை சேர்க்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள்.


மகரம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால், மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் இருப்பவர்களுக்கு சிறந்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். வணிக ரீதியாக மிகவும் சாதகமான பலன்களைத் தரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். 


சிம்மம்: வியாபாரத்தில் பெரும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளைப் பெறுவதற்கான யோகங்களும் உண்டு. வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.


மேலும் படிக்க | கும்ப ராசிக்கு செல்லும் சனி; ஏழரை நாட்டு சனியினால் நெருக்கடிக்கு ஆளாகும் ‘சில’ ராசிகள்!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ