)
இந்து மதத்தில் நவராத்திரி பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நவராத்திரி வருடத்திற்கு 4 முறை வருகிறது. இவற்றில் ஆனி மாதத்தில் குப்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. குப்த நவராத்திரி ஆஷாட மாத சுக்ல பக்ஷத்தின் பிரதமை திதியில் தொடங்கி நவமி வரை தொடரும். குப்த நவராத்திரியின் 9 நாட்களிலும் அன்னை துர்கை வழிபாடு நடைபெறும்.
குப்த நவராத்திரியில் 2 மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. மிதுன ராசியில் குரு மற்றும் சூரியனின் இணைவினால் குரு ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறது. மேலும், சந்திரன் மிதுன ராசியில் இருப்பதால், சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இது தவிர, சுக்கிரன் இன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சுப நிலைகள் 5 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும். இந்த சமயத்தில், அன்னையின் அருளால் சில ராசிகள் பெரும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்
ரிஷபம்: குப்த நவராத்திரி பலன்கள்
குப்த நவராத்திரியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த 9 நாட்களில் திடீர் பண வரவை பெறலாம். முதலீடுகள் நல்ல இலாபத்தைக் கொடுக்கும். உங்கள் எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைப் பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் இந்த காலக்கட்டத்தில் முடியலாம்.
மிதுனம்: குப்த நவராத்திரி பலன்கள்
குப்த நவராத்திரியில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலனைப் பெறுவீர்கள். பெற்றோரால் பணப் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலையும் வலுப்பெறும். செல்வாக்கு மிக்கவர்களுடன் பழகும் வாய்ப்பு உண்டாகும். இதன் காரணமாக, நீங்கள் புதிய வருமான ஆதாரங்களையும், ஆதாயங்க்களையும் பெறலாம். நவராத்திரியின் இந்த நாட்களில், உங்களுக்குள் நேர்மறையான மாற்றங்களையும் உணர்வீர்கள்.
சிம்மம்: குப்த நவராத்திரி பலன்கள்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலம் என்றாலும், துர்கை அம்மன் அருளால் வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த குப்த நவராத்திரியில், புதிய வீடு, நகை, வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள், அவர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
தனுசு: குப்த நவராத்திரி பலன்கள்
குப்த நவராத்திரியில் தனுசு ராசியினருக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் சில தகவல்கள் கிடைக்கும். இது நாள் வரை கைக்கு வராமல் இருந்த பணத்தைப் பெறுவீர்கள். இது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். துர்கை அம்மனின் ஆசிர்வாதத்தால் உங்களின் நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. கை வைத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மீனம்: குப்த நவராத்திரி பலன்கள்
குப்த நவராத்திரியில் மீன ராசியினர், இது நாள் வரிய வாட்டி வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். சட்டச் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள். முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். தற்போது ஜென்ம சனி காலம் என்றாலும் துர்கை அம்மன் அருளால், பிரச்சனைகள் தீர்ந்து மன அமைதி ஏற்படும். பணியிடத்தில் உங்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.உங்கள் புத்திசாலித்தனத்தால், ஒரு பெரிய பிரச்சனையை தீர்த்து நற்பெயரைப் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ