Gajakesari Rajayog Prediction: ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தொடர்ந்து ராசிகளுக்கு இடையேயும், நட்சத்திரங்கள் இடையேயும் பெயர்ச்சி அடைகின்றன. இதனால், 12 ராசிகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தற்போது ரிஷப ராசியில் குரு பகவான் (Jupiter) வீற்றிருக்கிறார். குரு பகவான் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் வழங்குவார். அதே நேரத்தில், சந்திர பகவானும் (Moon) ரிஷப ராசிக்கு வரும் ஏப். 2ஆம் தேதி வருகிறார். குரு பகவான் மற்றும் சந்திர பகவான் ஆகிய சுபமான கிரகங்கள் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உண்டாகும்.
கஜகேசரி ராஜயோகத்தால் (Gajakesari Rajayog) எதிர்பாராத செல்வமும், செழிப்பும் சில ராசிகளை தேடி வரும். சமூக தளத்தில் பெரிய முன்னேற்றத்தையும் காண்பார்கள். அந்த வகையில், 3 ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் அதிகமாகும். கஜகேசரி ராஜயோகத்தால் அதிக பலன்களை பெறுவார்கள்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களின் (Taurus) ஜாதகத்தில் கஜகேசரி ராஜயோகம் ஏற்படுவதால் நம்பிக்கைகள் அதிகமாகும். சமுதாயத்தில் சிறந்தவர்களின் தொடர்புகள் அதிகரிக்கும், இது எதிர்காலத்தில் கைக்கொடுக்கும். திருமணமானவர்களுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கும்.
இணையருடனான நெருக்கம் அதிகரிக்கும், இணையருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்களின் ஆசி கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து திடீர் பண வரவுகள் வரும். ஆரோக்கியம் சிறப்பாகும். இதனால், மகிழச்சியாக இருப்பீர்கள்.
மேலும் படிக்க | சூரியனில் சனி பெயர்ச்சி 2025.. நல்ல காலம் ராஜ பொற்காலம் இந்த ராசிகளுக்கு
கடக ராசி
கடக ராசிக்காரர்களின் (Cancer) ஜாதகத்தில் கஜகேசரி ராஜயோகம் 11ம் வீட்டில் உண்டாகும். இது பல்வேறு சாத்தியங்களுக்கான கதவுகளை உங்கள் வாழ்க்கையில் திறக்கும் எனலாம். அதாவது, தொழில் சிறப்பாக நடக்கும். புதிய கடைகளை கூட திறப்பீர்கள்.
உங்களது தொழில் பார்ட்னரும் சிறப்பாக செயல்படுவார். இருவரும் சேர்ந்து முதலீடு செய்து புதிய வேலையை தொடங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். கட்சிகள், இயக்கம் போன்ற சமூகம் சார்ந்த அமைப்பில் நீங்கள் முக்கிய பொறுப்பை பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் கடின உழைப்புக்கான பலன்களை பெறுவார்கள். பொருளாதார அளவிலும் முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
தனியார் அல்லது அரசு வேலையில் வேலைப்பார்க்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு (Leo) பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். வேலையிடத்தை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை உங்களை தேடி வரும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பொருளாதாரமும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யப்படவில்லை)
மேலும் படிக்க | சூரியனும் புதனும் இணைவதால்... இந்த 3 ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ