Guru Peyarchi Palangal 2025: இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு பிறகு மிகப்பெரிய நிகழ்வான குரு பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இது 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்படும். மேலும் இந்த குரு கிரகமானது சுமார் 13 மாதங்கள் ஒரு ராசி தங்கி அங்கு ஆட்சி செய்து மற்றொரு ராசிக்கு நகர்வார் என்பது ஜோதிட ஐதீகமாகும். குரு பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குரு பகவான் ஒரு சுபமான கிராமாக பார்க்கப்படுகிறார். குரு பார்வை ஒருவர் மீது இருந்தால் அவர் தன் வாழ்வில் பல வெற்றிகளை காண்கிறார். அவரது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
இந்நிலையில் இந்த வருடம் குரு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். குருவின் இந்த ராசி மாற்றம் வருகிற 2025 மே 14 அன்று இரவு 11:20 மணிக்கு நடைபெற உள்ளது. மிதுன ராசியில் குருவின் பெயர்ச்சி சிந்தனை திறன், தன்னம்பிக்கை, மற்றும் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த உதவும். குரு பெயர்ச்சி 2025-ன் போது பலருக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | சூரியனில் சனி பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு
மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்கு சாதகமான பலனைத் தரும். சமூக தொடர்புகள் அதிகரிக்கலாம். சகோதர சகோதரிகளுடன் அன்புடன் இருப்பீர்கள். எனினும் சில முக்கியமான பணிகள் முடிவடைவதில் தாமதமாகலாம். உடல் நலத்தை பொறுத்த வரை மன அழுத்தம் மற்றும் சோர்வு ஏற்படலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். இதனால் நிதி நிலை மேம்படும், பணியிடத்தில் உச்சத்தை தொடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில சுப காரியங்களும் நடக்கக்கூடும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சியால் நல்ல சுப பலன் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். முழுமையான வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் பெற்று பண மழை கொட்டும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்: குரு பெயர்ச்சி 2025, கடக ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பை தரலாம். சுய வளர்ச்சி உண்டாகும். எனினும் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். செரிமான அமைப்பில் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வருமான உயர்வ காணப்படும். பணம் குவியும், நிதி ஆதாயம் உண்டாகும். தொழிலில் வெற்றி பெறலாம். வேலையில் புதிய வாய்ப்புகளை பெறலாம். பொருளாதார நிலை மேம்படும்.
கன்னி: கன்னி ராசிக்கு பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் மற்றும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நிதி நிலைமை வலுவாக இருக்கும், வருமானம் அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: குரு பெயர்ச்சிக்கு பின்னர் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். அதிர்ஷ்ட காத்து வீசும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். உடல்நிலையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு பரம்பரை சொத்து மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். முதலீடு மூலம் சாதகமான பலனைப் பெறுவீர்கள். மன அழுத்தம், பதட்டம் மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனுசு: குருவின் பெயர்ச்சி தனுசு ராசிக்கு நிதி நன்மையை தரும். நல்ல நிதி வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். உடல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் வளர்ச்சி ஏற்படும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலை கிடைக்கலாம். பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும்.
கும்பம்: 2025 ஆம் ஆண்டு ஏற்படக்கூடும் குரு பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் ஏற்படும். சில முடிவுகளை எடுக்கும் முன் கவனமாக செயல்படவும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும்.
மீனம்: மீன ராசிகக்கு குரு பெயர்ச்சியால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் அடிக்கடி ஏற்படக்கூடும்.
மேலும் படிக்க | பங்குனி 3 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









