Guru Peyarchi Palangal 2025: ஜோதிட ரீதியாக இந்த ஆண்டு, பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் நடக்க உள்ளது, அதிலும் சனி மற்றும் குரு கிரகங்களின் இடமாற்றம் மிக முக்கிய நிகழ்வாக காணப்படுகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 29 ஆம் தேதி அன்று, சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் பிறகு குரு கிரகமானது ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி ஆகும். சுமார் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி அங்கு ஆட்சி செய்து பின்னர் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சிவார் சனி பகவான். சனிக்குப் பிறகு, மெதுவாக நகரக்கூடிய கிரகமாக குரு வியாழன் பார்க்கப்படுகிறது. இந்த கிரகமானது சுமார் 13 மாதங்கள் ஒரு ராசி தங்கி அங்கு ஆட்சி செய்து மற்றொரு ராசிக்கு நகர்வார் என்பது ஜோதிட ஐதீகமாகும்.
இந்நிலையில் இந்த இரண்டு முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகும். அதன்படி சனி முதலில் பெயர்ச்சியப் போகிறார், பின்னர் குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. மேலும் குரு பெயர்ச்சி ஜோதிடத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குரு பகவான் ஒரு சுபமான கிராமாக பார்க்கப்படுகிறார். குரு பார்வை ஒருவர் மீது இருந்தால் அவர் தன் வாழ்வில் பல வெற்றிகளை காண்கிறார். அவரது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் படிக்க | சூரியனில் சனி பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு
குருபகவான் மே 14 ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குரு பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் அளிப்பார். எனினும் சில ராசிகள் குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ளன. இந்த ராசிக்காரர்களுக்கு வரும் நாட்கள் பொற்காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து பணிகளும் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சியால் நல்ல சுப பலன் கிடைக்கும். குருவின் பெயர்ச்சி மிதுன ராசியில் நடக்க உள்ளதால், உங்கள் ஆளுமையிலும் தன்னம்பிக்கையிலும் வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். முழுமையான வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்து படிப்படியாக நிறைவேறும். நிதி ஆதாயம் பெற்று பண மழை கொட்டும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை இன்பத்துடன் பொங்கி வழியும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உயர் மரியாதையைப் பெறுவீர்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign): நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியின் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். குரு பெயர்ச்சி சிம்ம ராசியிலிருந்து பதினொன்றாவது வீட்டில், அதாவது லாப ஸ்தானத்தில் பயணிக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், வருமான உயர்வ காணப்படும். பணம் குவியும்,நிதி ஆதாயம் உண்டாகும். புதிய முயர்ச்சிகள் வெற்றியைத் தரும். தொழிலில் வெற்றி பெறலாம். வேலையில் புதிய வாய்ப்புகளை பெறலாம். பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். முதலீடு செய்யப்பட்ட பணத்தால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அரசு வேலை கிடைக்கலாம். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | பங்குனி 3 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









