Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களிலும் குரு பகவானுக்கு தனிச்சிறப்பு உள்ளது. அவர் தேவர்களின் குருவாக போற்றப்படுகிறார். சுப கிரகமாக உள்ள அவர், அறிவாற்றல், புத்திக்கூர்மை, அதிர்ஷ்டம், செல்வம், குழந்தைகள், திருமணம், தான தர்மம் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், நாடு, உலகம் என்று மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. குரு பகவான் ஒரு ராசிக்கு திரும்பி வர சுமார் 12 ஆண்டுகாலம் ஆகும். இந்த காரணத்தால், குருவின் தாக்கம் ராசிகளில் அதிகமாக இருப்பதுண்டு. குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவார். இதன் பின்னர், அக்டோபர் 18, 2025 அன்று இரவு 9:39 மணிக்கு, குரு மிதுன ராசியிலிருந்து வெளியேறி சந்திரனுக்குச் சொந்தமான கடக ராசிக்குள் நுழைவார். குரு பெயர்ச்சியால் அதிக அனுகூலமான பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
குரு பெயர்ச்சி 2025: ரிஷபம் (Taurus)
குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ரிஷப ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இதனுடன், குருவின் பார்வை ஆறாவது, எட்டாவது மற்றும் பத்தாவது வீட்டின் மீது விழுகிறது. இதன் காரணமாக மூதாதையர் சொத்தின் மூலம் நன்மைகளைப் பெறலாம். இது தவிர, தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இதனுடன், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மேலும் மத விஷயங்களில் தீவிரமாக பங்கேற்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக வாழ்வீர்கள். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக மாறும். இதனுடன், உங்கள் பேச்சினால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள்.
குரு பெயர்ச்சி 2025: சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் குரு பெயர்ச்சி நன்மை பயக்கும். சிம்ம ராசிக்காரர்கள் அனைத்துத் துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலைமை தொடர்பாக நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இதனுடன், உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இதனுடன், குழந்தைகளால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் உயர்கல்வி பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சகோதர சகோதரிகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உடல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து இப்போது நிவாரணம் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி 2025: தனுசு (Sagittarius)
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை நிலைத்திருக்கும். உங்கள் குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். இதனுடன், வணிகத்தில் பல லாப வாய்ப்புகளும் உருவாகும். வணிகத்தில் கணிசமான வெற்றி கிடைக்கும். வருமானம் வேகமாக அதிகரிக்கும். இந்த காலத்தில் முடிவெடுக்கும் திறனும் நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பண தட்டுப்பாடு என்பதே இருக்காது... பர்ஸில் வைக்க வேண்டியவையும்... வைக்க கூடாதவையும்
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி.. பொற்காலம் ஆரம்பம், வெற்றிகள் இந்த ராசிகளுக்கு குவியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ