ஜோதிட ரீதியாக விசுவாவசு தமிழ் வருடம் மிகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படும் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்தும் இந்த ஆண்டு நிகழ்கின்றன. சனிப்பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமாக கருதப்படும் குரு பெயர்ச்சி, வரும் மே மாதம் 14ஆம் தேதி அன்று நிகழ இருக்கிறது. வைகாசி மாதம் பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நடக்கும் இந்த பெயர்ச்சி, அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு செல்லும் குரு பகவான்
சுமார் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, தனது ஆசையை மாற்றிக் கொள்ளும் குரு பகவான், வரும் மே மாதம் 14ஆம் தேதி அன்று, ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு செல்கிறார். அதோடு இந்த வருடம் குரு ஆதிசாரமாக பெயர்ச்சி ஆகிறார். வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி, கடக ராசிக்கு சென்று பின்னர் மீண்டும் டிசம்பர் மாதம் 5ம் தேதி மகர ராசிக்கு வருகிறார். இந்நிலையில் குரு பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குருவின் அருளால் அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. பயணங்களும் அதன் மூலம் கிடைக்கும் லாபங்களும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பை தரும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பகவான் வாழ்க்கையில் வெற்றிகளை அள்ளிக் கொடுப்பார். ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். எனினும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுன ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகளை நீக்கும். நீண்ட காலமாக நிறுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் சட்டென முடிந்து நிம்மதியை கொடுக்கும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பகவான் அருளால் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலான நாங்கள் நடக்கும் வாய்ப்பு அதிகம். புதிய உறவுகள் வாழ்வில் இனிமையை சேர்க்கும். பணியிடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, சிம்ம ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் காரணமாக வாழ்க்கை நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பகவான் அருளால், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதையும் ஈடுபாட்டுடன் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். இலக்குகளை அடைவது எளிதாக இருக்கும். திட்டமிட்டபடி பணிகள் அனைத்தும் நிறைவேறும்.
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு, சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நிதிநிலைமை முன்னேறும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
விருச்சிக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பகவான் அருளால், வீடு மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் அதிகரிக்கும். வாய்ப்பு வசதிகள் கைகூடும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டத்திற்கு பஞ்சம் இருக்காது.
தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள், விலகி நல்ல தொடக்கம் ஏற்பட குரு அருள் புரிவார். ஆன்மீகத்தில் மனது எடுபடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை பிறக்கும்.
மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பகவான் அருளால், உறவுகள் இனிமையாக இருக்கும். உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நிதிநிலை சிறப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். அதிர்ஷ்டத்திற்கும் குறைவிருக்காது.
கும்ப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி காரணமாக, வேலையில் தொழில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆடம்பரத்திற்காக செலவழிப்பீர்கள். புதிய திட்டங்களில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் பெறலாம். பொருளாதார நிலை உயரும்.
மீன ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்டபடி பணிகளை நிறைவேற்றி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் திறனை பாராட்டுவார்கள். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வளங்கள் தரும் வைகாசி... சூரியன் குரு அருளால் ஜாக்பாட் பலன்களை பெரும் சில ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









