)
Saturn Transit In Poorattathi Today: வெள்ளிக்கிழமை அதாவது இன்று சனி தனது பாதையை மாற்றப் போகிறார். சனியின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. சனியின் பாதை மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது, சனி மீனம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் வழியாக பெயர்ச்சியடைந்து பயணித்து வருகிறார். இதனிடையே இடறு அதாவது அக்டோபர் 3 ஆம் தேதி, இரவு 9:49 மணிக்கு, சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவாபெயர்ச்சி அடைவார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார். எனவே சனியின் நட்சத்திர மாற்றம் (Saturn Star Transit) அனைத்து ராசிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும். எனினும் குருவின் ராசியில் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதை தெரிந்துக் கொள்வோம்:
கடகம் (Cancer Zodiac Sign): குருவின் ராசியில் சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உங்களுக்கு மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வணிக நிலைமைகளும் நன்றாக இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சனி இந்த ராசியின் ஒன்பதாவது வீட்டில் அமர்வதால், கடக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். லாபத்தைப் பெறலாம். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும், மேலும் பல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
துலாம் (Libra Zodiac Sign): குருவின் ராசியில் சனி பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். மதச் செயல்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கும். நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். வணிகம் நன்றாக முன்னேறும், உங்கள் நிதி நிலைமை வலுவடையும். நல்ல ஆரோக்கியத்தை பெறுவீர்கள். திருமண வாழ்க்கை அமைதியானதாகவும் இணக்கமாகவும் இருக்கும், மேலும் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். உங்கள் புகழ் அதிகரிக்கும்.
கும்பம் (Aquarius Zodiac Sign): குருவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி கும்ப ராசிக்கு நல்ல பலனைத் தரக் கூடும். வெற்றியை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். வீட்டு மோதல்களும் பிரச்சனைகளும் தீர்வுக்கு வரும். உங்கள் போராட்டம் பலனளிக்கும். நல்ல செய்திகளைப் பெறலாம். கும்ப ராசிக்காரர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்க உற்சாகமாக இருப்பார்கள், மேலும் வாழ்க்கையில் நேர்மறையான மனநிலையைப் பேண முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ