Guru Vakra Peyarchi 2026: குரு கிரகம் அறிவு, தர்மம், கல்வி, மதம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வளர்ச்சி ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. இந்த கிரகத்தின் வலுவான நிலையைக் கொண்ட ஜாதகக்காரர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமையும் நன்றாக இருக்கும். விழாயன் கடவுள்களின் குரு ஆவார், எனவே இது தான் இவரை தேவகுரு என்றும் அழைக்கிறோம். அந்த வகையில் வருகிற மாசி மாதம் அதாவது மார்ச் 11, 2026 அன்று, குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நாட்கள் தொடங்க ஆரம்பிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களின் தலைவிதி 120 நாட்களுக்கு பிறகு மாறும், அதிர்ஷ்டம் பெருகும்
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்கு குருவின் வக்ர நிவர்த்தி நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். தேங்கி நிற்கும் பணத்தை திரும்பப் பெறலாம். பணத்தை சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உங்கள் பேச்சு இனிமையாக மாறும், இதனால் உங்களுடன் வேலை செய்பவர்கள் ஈர்க்கப் படுவார்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ர நிவர்த்தி அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் நிதி நிலைமை மேம்படத் தொடங்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். தடைபட்ட திட்டங்கள் வேகம் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கடின உழைப்பு பலனளிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் பெற்றோரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது அல்லது புதிய திட்டத்தைத் தொடங்குவது பற்றி யோசிப்பவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு வரும் மார்ச் 11 முதல் பாக்கியம், நற்பேறு, ஆகூழ், யோகம் கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் இருப்பவர்கள் சாதகமான பலன்களைக் காண்பார்கள். பல்வேறு ஆதாரங்கள் மூலம் பணம் கிடைக்கும். நிதி பற்றாக்குறை இருக்காது. நிறைவேறாத ஆசைகள் நிறைவேறலாம். வெளிநாட்டில் வேலை தேடுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொள்ளலாம்.
குரு பகவானின் முழுமையான அருளை பெற ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ! என்கிற இந்த மூல மந்திரத்தை தினமும் ஜபிக்கவும். குருவின் முழுமையான ஆசியை பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









