அளவில்லாத வெற்றியை கொடுக்கும் ஜெய ஏகாதசி... ராசிக்கு ஏற்ற சில தானங்கள்

மாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி ஜெய ஏகாதேசி என அழைக்கப்படுகிறது. தடைகள், பிரச்சனைகள் இன்னல்கள், பாவங்கள் என அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது ஜெய ஏகாதசி விரதம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2025, 06:03 PM IST
அளவில்லாத வெற்றியை கொடுக்கும் ஜெய ஏகாதசி... ராசிக்கு ஏற்ற சில தானங்கள்

மாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி, ஜெய ஏகாதசி என அழைக்கப்படுகிறது. தடைகள், பிரச்சனைகள் இன்னல்கள், பாவங்கள் என அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது ஜெய ஏகாதசி விரதம். மூதாதையர்களின் ஆசியைப் பெறவும், செய்த பாவங்கள் நீங்கவும் ஜெய ஏகாதசி விரதம் உதவும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

பக்தர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும்

ஜெய ஏகாதசி வரும் மார்ச் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு உரிய மிக முக்கிய விரோதமான ஏகாதசி விரத நன்னாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். விரதம் இருப்பவர்களின் சந்ததியினரும் பலனடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள். முன்னோர்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க கடைபிடிக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம் முக்கியமானதாகும்.

அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்

ஏகாதசி திதியில், பக்தியுடன் விரதம் இருந்து, விஷ்ணுவை பூஜித்து வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கையில் சங்கடங்கள் எதுவுமே இருக்காது என்பது ஐதீகம். ஏகாதசி விரத நன்னாளில், விரதம் இருந்து பெருமாளை பூஜிப்பதுடன் ராசிக்கு ஏற்றபடி தானங்கள் செய்வதால், நினைத்தது நடக்கும். பகவான் விஷ்ணுவின் அருளால், வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

மேஷ ராசி

அன்ன தானங்கள் செய்வது, பகவான் விஷ்ணுவின் மனதை குளிர்விக்கும்.

ரிஷப ராசி

சர்க்கரை அல்லது சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட இனிப்புகளை தானம் செய்வதால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

மிதுன ராசி

பண தேவை உள்ளவர்களுக்கு, ரொக்கப் பணத்தை தானமாக கொடுப்பதால், பெருமாளின் அருளைப் பெறுவதோடு, மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

கடக ராசி

அரிசியை தானமாக கொடுப்பதால், மனக்குழப்பங்கள் மன சஞ்சலங்கள் நீங்கி, நிம்மதி பிறக்கும்.

சிம்ம ராசி

தேனை தானமாக கொடுப்பதால், குரு பகவானின் நிலை வலுவடைந்து கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

கன்னி ராசி

பழங்களை தானமாக கொடுப்பதால், பொருளாதார பிரச்சனைகள் நீங்கி, செல்வ செழிப்புடன் வாழும் நிலை ஏற்படும்.

துலாம் ராசி

பால் தானம் செய்வதால், சுக்கிரனின் நிலை வலுப்பெற்று, அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும்.

விருச்சிக ராசி

திருமணத்திற்கு தேவையான பொருட்களை தானம் செய்வதால், வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.

தனுசு ராசி

வாழைப்பழங்களை தானம் செய்வதால், குரு பகவானின் நிலை வலுப்பெற்று வாழ்க்கையில் மங்களம் உண்டாகும்.

மகர ராசி

எள் தானம் செய்வதால், பித்ரு தோஷங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிடைத்து, வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறலாம்.

கும்ப ராசி

கும்ப ராசியினர் ரொக்கப் பணத்தை தானம் செய்வதால், நிதி நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி, பொருளாதார நிலை மேம்படும்.

மீன ராசி

மீன ராசியினர் மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்வதால் விஷ்ணு பகவானின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெற்று, வாழ்க்கை இன்பங்கள் அனைத்தையும் அடையலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: துலாம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News