)
July 2025 Rasi Palan : 2025ஆம் ஆண்டு தொடங்கி, அதற்குள்ளாக ஜூலை மாதம் வந்து விட்டது. வருடத்தின் முதல் பாதியில், பலருக்கு வாழ்வில் இன்னல்களும், துயரங்களும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்திருக்கும். இதனால், இனி வரும் 6 மாதங்களாவது தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஒளி வீசுமா என்று எண்ணி சில ராசிகள் காத்துக்கொண்டு இருக்கலாம். சில ராசிகளுக்கு, வரும் ஜூலை மாதம் அற்புதமான யோகம் நிறைந்த மாதமாக மாற இருக்கிறது. அப்படி, அதிர்ஷ்டத்தை எதிர்கொள்ளப்போகும் ராசிகள் எவை தெரியுமா?
மேஷம்:
12 ராசிகளுள், முதல் ராசியை சேர்ந்த மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்கள் வந்து சேர இருக்கிறது. ஜூலை மாதத்தில் அவர்களுக்கு அனுகூலமான விஷயங்கள் நடைபெறுவதோடு, வாழ்வில் பலவித உயரங்களை எட்ட அடிக்கற்கல் இந்த மாதத்தில் பொறிக்கப்பட உள்ளது. சிலருக்கு புதிதான வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நீதி நிலமை உயர்ந்து, வருவாயும் வலுவாக இருக்கும். அனைத்திலும் வெற்றி கண்டு, புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேலும், திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியான வாழ்க்கையால் நிறைந்திருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்வில் மகிழ்ச்சி கிட்ட இருக்கிறது. இவர்களின் மனதிலும், இருக்கும் சூழலிலும் அமைதி நிலவலாம். இவர்களுக்கு நிதி ஆதாயங்கள் ஏற்படுவதோடு, முதலீடுகளில் இருந்தும் லாபம் பார்க்க உள்ளனர். திருமணம் ஆனவர்கள் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியான காலத்தை காண இருக்கின்றனர்.
சிம்மம்:
வரும் ஜூலை மாதம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் மாதமாக மாற இருக்கிறது. உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவுவதோடு, செல்வ செழிப்பும் உயரலாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும். அதே போல, அதற்கு ஏற்ற முன்னேற்றங்களும் வேலையில் இருக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவீர்கள். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். எப்போதோ செய்த முதலீட்டின் மூலம், இப்போது லாபம் காணலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அவர்களுக்கு சாதகமான மாதமாக அமைய இருக்கிறது. நீண்ட நாட்களாக மனதில் வைத்து வேலை பார்த்த ஒரு விஷயத்தை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க இருக்கிறது. வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான மாற்றங்களை சந்திப்பீர்கள். இந்த மாதம், உங்களின் நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ