ஜோதிடத்தின் படி, வியாழன் கிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகும். ஏனெனில் இந்த கிரகம் நல்ல பலன்களை அள்ளித் தரும். அதேபோல் குரு தனுசு மற்றும் மீனம் ராசியில் அதிபதி ஆவார். மேலும் குரு கடக ராசியில் எப்போதும் உச்சம் பெற்றுப்பார். குருவின் பார்வை ஏற்பட்டால் திருமணம், கல்வி, குழந்தைகள், செல்வம் மற்றும் தொழில் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
ஒன்பது கிரகங்களில் வியாழன் (Jupiter Transit 2025) ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, அதிலும் குருவின் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குருவின் அருளால், வாழ்க்கையில் இன்பங்கள் பெறலாம். அந்த வகையில் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு மே 14, 2025 அன்று புதனின் அதிபதி ராசியான மிதுன (Gemini) ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் அக்டோபர் 18, 2025 வரை இதே ராசியில் பயணிப்பார். அத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு குரு பெயர்ச்சி (Guru Peyarchi) இரண்டு முறை நடைபெறும். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. எனவே குரு பகவானுக்கு பிடித்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்கு சந்திரன் அதிபதி. இந்த ராசியில் குரு மிகவும் பலம் வாய்ந்தவராக இருக்கிறார். இதன் காரணமாக குருவின் சிறப்பு ஆசிகள் கடக ராசிக்காரர்கள் மீது எப்போதுமே இருக்கும். குருவின் அருளின் காரணமாகவே, சிரமங்கள் கரைந்து மன நிம்மதி பெறுவீர்கள். குழப்பங்களுக்கு எளிதாக தீர்வைக் காண்பீர்கள். குருவின் அருளால் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்களாகவும், வேலைகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். குருவின் அருளால் புதிய பொறுப்புகள் கிடைக்கும், குடும்பத்தில் நல்ல செய்திகளும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். முதலீட்டிலும் லாபம் கிடைக்கும். எந்த சிரமத்தையும் எளிதாக சமாளித்து விடுகிறார்கள். குரு அருளால் இவர்கள் வாழ்வில் அனைத்து வித வெற்றிகளையும் பெறுகிறார்கள்.
சிம்மம் (Leo Zodiac Sign): குரு கிரகம் சிம்ம ராசிக்காரர்கள் மீதும் நேர்மறையான விளைவைத் தருவார். சிம்மம் என்பது சூரியனின் ராசியாகும், மேலும் சூரியனுக்கும் குருவுக்கும் இடையிலான உறவு சாதகமாக இருப்பதால், குருவின் ஆசீர்வாம் உங்களுக்கு எப்போது இருக்கும். தலைமைத்துவமும், அச்சமின்மையும் பிறப்பிலிருந்தே உங்களுக்கு இருக்கும். தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட இவர்கள் குருவின் அருளால் கொள்கை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகிய குணங்களால் நிறைந்திருப்பார்கள். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே சிறப்புப் புகழைப் பெறுவார்கள். இதனுடன், வாழ்நாள் முழுவதும் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். கல்வியும், தொழிலும் பெரிய இலக்குகளுக்கு வழிவகுக்கும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ஒரு நெருப்பு ராசி, அதன் அதிபதி கிரகம் வியாழன், இதனால் இந்த ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். சுதந்திர சிந்தனை கொண்ட இந்த ராசி மக்கள் குருவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். குருவின் அருளின் காரணமாக, நிதி நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் சம்பாதித்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கின்ற ராசி தனுசு ஆகும்.
மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசியின் ஆளும் கிரகம் குரு என்பதால், இந்த ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கற்பனைத்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். பரிவுணர்வு மிக்கவர்கள், பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளைச் செய்வார்கள். குருவின் அருளின் காரணமாகவே இந்த ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் முழு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆன்மீக அமைதியைப் கொண்டவர்கள் ஆவார்கள். வேலையில் மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெறுவதில் அதிர்ஷ்டம் முழுமையாக துணை நிற்கும். குருவின் அருள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு முழுமையாக பங்களிக்கும். மன அமைதியும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி, புதன் ஆசியால் கோடீஸ்வர யோகம் உள்ள 3 ராசிகள்..!
மேலும் படிக்க | மகாசிவராத்திரி 2025: பூஜையும் விரதமும்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









