ஆனி மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய யோகம்... ராஜயோக பலன்களை பெறும் 5 ராசிகள்

Tamil Ani Month Horoscope: சூரியன் மிதுனத்திற்கு செல்லும்போது ஆனி மாதம் பிறக்கிறது. இதனால் ஆனி மாதம் மிதுன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனி மாதத்தில் ஏற்படும் சூரிய பெயர்ச்சி காரணமாக குரு ஆதித்ய யோகமும் உருவாகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2025, 04:50 PM IST
  • சூரியனும் குரு பகவானும் இணையும் அற்புத கிரக இணைவு மிதுன ராசியில் நிகழ உள்ளது.
  • குரு, சூரியன் பெயர்ச்சிகள் பொதுவாக நற்பலன்களை கொடுக்கின்றன.
  • சூரியன் மிதுனத்திற்கு செல்லும்போது ஆனி மாதம் பிறக்கிறது.
ஆனி மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய யோகம்...  ராஜயோக பலன்களை பெறும் 5 ராசிகள்

ஆனி மாத பலன்கள்: விசுவாவசு வருடம் ஆனி மாதம் பிறக்க இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ளன. சூரியன் மிதுனத்திற்கு செல்லும்போது ஆனி மாதம் பிறக்கிறது. இதனால் ஆனி மாதம் மிதுன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மே மாதம் குரு ஏற்கனவே, மிதுன ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், ஆனி மாதத்தில் ஏற்படும் சூரிய பெயர்ச்சி காரணமாக குரு ஆதித்ய யோகமும் உருவாகிறது. சூரியனும் குரு பகவானும் இணையும் அற்புத கிரக இணைவு மிதுன ராசியில் நிகழ உள்ளது.

Add Zee News as a Preferred Source

ஜூன் மாத சூரிய பெயர்ச்சி

ஜூன் மாதம் 15 ஆம் தேதி, சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது, அங்கு ஏற்கனவே அமர்ந்துள்ள குருவுடன் இணைவார். ஜோதிடத்தில் சூரியன் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி இரண்டும் சுப பலன்களை கொடுக்கும் கிரகங்களாக கருதப்படுகின்றன. ஏனெனில், இதன் பெயர்ச்சிகள் பொதுவாக நற்பலன்களை கொடுக்கின்றன. நற்பலன்கள் இல்லாவிட்டாலும், அதிக அளவில் கெடுபலன்கள் நிச்சயம் இருக்காது என்கின்றனர் ஜோதிடர்கள்.

குரு ஆதித்ய யோகத்தினால் பலனை பெரும் ராசிகள்

ஆனி மாத பிறப்பில் உருவாகும் குரு ஆதித்ய யோகத்தினால், குரு பகவான் மற்றும் சூரியனின் அருளை பரிபூரணமாக பெற்று ரிஷபம் சிம்மம் உள்ளிட்ட ஐந்து ராசிகள், பணம் பெயர் புகழ், அதிர்ஷ்டம் என அனைத்தையும் பெற்று வளமாக வாழ்வார்கள் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.

ரிஷப ராசிக்கான ஆனி மாத பலன்கள் (Taurus Zodiac)

நிதி நன்மைகளுக்கு குறைவிருக்காது. மாணவர்களின் உயர்கல்வி விருப்பம் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றி, அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்ம ராசிக்கான ஆனி மாத பலன்கள் (Leo Zodiac)

மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலை உயரும். பாலிய நண்பர்களை சந்தித்து, நேரத்தை செலவிடுவதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். அலுவலகத்தில், உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

கன்னி ராசிக்கான ஆனி மாத பலன்கள் (Virgo Zodiac)

வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிக்கும் உங்கள் குணம் காரணமாக பெரிய வெற்றிகளை அடைய முடியும். நிதிநிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கைகூடும் வாய்ப்பு உள்ளது. கடினமான வேலைகளையும் உங்கள் திறமையால் எளிதாக செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

கும்ப ராசிக்கான ஆனி மாத பலன்கள் (Aquarius Zodiac)

உங்கள் திறமையால், அனைவரின் பாராட்டையும் தருவீர்கள். பெயரும் புகழும் தேடிவரும். வீடு சொத்து வாங்கும் கனவு நிறைவேறும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் இருக்கும். ஆடம்பரமான வசதியான வாழ்க்கையை வாழ விரும்பும் உங்கள் எண்ணம் ஈடேறும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது.

மீன ராசிக்கான ஆனி மாத பலன்கள்  (Pisces Zodiac)

பண வரவின் காரணமாக நிதிநிலை மேம்படும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் கை வைத்து காரியம் எல்லாம் வெற்றி தான். தொழில்துறையினர் நல்ல லாபம் பார்ப்பார்கள். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி வரும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். காரிய சித்தி ஆனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குரு, சுக்கிரன் நிலையால் உருவான லாப திருஷ்டி யோகம்: இன்று முதல் இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

மேலும் படிக்க | சனி பகவானின் அருளால்... 2027 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News