ஜோதிடத்தில், சனி பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சி என்றால் அது குரு பெயர்ச்சிதான். குரு பகவான் சுமார் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில், வரும் மே மாதம் 14ஆம் தேதி, வைகாசி மாசம் பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் பொதுவாக மோசமான கெடு பலன்களை கொடுக்கக் கூடியவர் அல்ல. எனினும் சில ராசிகள், குரு பெயர்ச்சியினால் ஓரளவு பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதனை தீர்க்க அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். குருவின் மிதுன ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 5 ராசிகாரர்களுக்கு, வாழ்க்கையில் சிறிது ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.
மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்
வேலையில் ஆர்வம் குறைந்து சோர்வு அதிகரிக்கலாம். எல்லா வேலையையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடலாம். இதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால சிக்கல்களை தவிர்க்க எப்போதும், சிந்தித்து முடிவெடுக்கவும். ஓம் நமோ பகவதே வாசுதேவாய இன்று மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்வதும் ஏழைகளுக்கு அன்னதானங்கள் வழங்குவதும் பாதகமான பலன்களை குறைக்கும்.
கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்
வேலையில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பணியிடத்தில் உங்களுக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை சிறந்த முறையில் ஏற்றுக் கொண்டு முடிப்பது நல்லது. இல்லை என்றால் பிரச்சினைகள் உண்டாகலாம். கடன் வாங்கும் நிலையை தவிர்க்க, செலவுகளில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க உதவும். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தவறாமல் வணங்கி வருவதும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் கஷ்டங்களை நீக்கும் அருமருந்தாக இருக்கும்.
விருச்சிக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். கவனக்குறைவு காரணமாக சிக்கல்கள் உண்டாகலாம் என்பதால், செய்யும் காரியங்களில் அதிக கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இல்லை என்றால் பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. செலவுகளும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பதால் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்க இயலும். பகவான் ஸ்ரீ ராமரின் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதும், ராம பக்தனான ஹனுமனை வணங்குவதும், பாதகமான பலன்களை குறைக்க உதவும்.
மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்
சோம்பேறித்தனம் காரணமாக இழப்புகள் ஏற்படலாம். எடுத்த காரியத்தை உடனுக்குடன் நிறைவேற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்களுக்கு எதிராக பலர் செயல்படக்கூடும். உடல்நல பிரச்சனைகளும் வாட்டி எடுக்கும். எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொறுமையாக இருந்து, நிலைமையை கையாள்வது சிக்கல்களை சமாளிக்க உதவும். துர்க்கை அம்மன் வழிப்பாடும், ஏழைகளுக்கு உதவுவதும், பிரச்சனைகளை தீர உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்
குடும்பத்தில் பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். பணியிடத்தில் வேலைப்பளுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நினைத்த பலனை கொடுக்காது. எனினும் மனம் தளராமல் தொடர்வதால், நினைத்த விஷயத்தை அடையலாம். வியாழக்கிழமை தோறும், தக்ஷிணாமூர்த்திக்கு, ஊறவைத்த கொண்டைக்கடலை கோர்த்த மாலை அணிவித்து வழிபடுவதும், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதும் குழப்பங்களையும் பிரச்சினைகளை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி தோஷம் விலக நவகிரகம் சுற்ற வேண்டிய 4 ராசிகள்..இதனால் நிம்மதியான வாழ்வு பெறலாம்!
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம், மகா பொற்காலம், ராஜயோகம் இந்த ராசிகளுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ