குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜ யோகம், பொற்காலம், அனைத்திலும் வெற்றி

Guru Peyarchi Palangal 2025: குரு பகவான் பிரகஸ்பதி வரும் மே 14, 2025 அன்று அதிகாலை 2:30 மணிக்கு புதனின் ராசியான மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்து வரும் அக்டோபர் 18, 2025 வரை இதே ராசியில் பயணிப்பார். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பெயர்ச்சி இரண்டு முறை நடைபெறும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 10, 2025, 11:27 AM IST
  • பண வரவு கூடும்.
  • பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜ யோகம், பொற்காலம், அனைத்திலும் வெற்றி

Guru Peyarchi Palangal: ஜோதிடத்தின் படி, வியாழன் கிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகும். ஏனெனில் இந்த கிரகம் நல்ல பலன்களை அள்ளித் தரும். அதேபோல் குரு தனுசு மற்றும் மீனம் ராசியில் அதிபதி ஆவார். மேலும் குரு கடக ராசியில் உச்சம் பெற்றுப்பார். குருவின் பார்வை ஏற்பட்டால் திருமணம், கல்வி, குழந்தைகள், செல்வம் மற்றும் தொழில் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும். 

Add Zee News as a Preferred Source

ஒன்பது கிரகங்களில் வியாழன் (Jupiter Transit 2025) ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, அதிலும் குருவின் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குருவின் அருளால், வாழ்க்கையில் இன்பங்கள் பெறலாம். அந்த வகையில் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு மே 14, 2025 அன்று அதிகாலை 2:30 மணிக்கு புதனின் அதிபதி ராசியான மிதுன (Gemini) ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் அக்டோபர் 18, 2025 வரை இதே ராசியில் பயணிப்பார். அத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு குரு பெயர்ச்சி (Guru Peyarchi) இரண்டு முறை நடைபெறும். இந்நிலையில் நிகழப் போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) ராஜ வாழ்க்கை, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். புதிய இடத்தில் வேலை கிடைக்கலாம். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் திருப்தி கிடைக்கும், அதுமட்டுமின்றி பதவி உயர்வு கிடைக்கலாம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): குரு பெயர்ச்சி மிதுன ராசியில் தான் நிகழப் போவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கலாம். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். மேலும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பண வரவு கூடும்.

துலாம் (Libra Zodiac Sign): மிதுன ராசியில் நிகழப் போகும் குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட கால கடின உழைப்பிற்கு இப்போது பலன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். செல்வம் அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நிதி ஆதாயம் உண்டாகும். வேலையில் வெற்றி கிடைக்கும், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வேலையில் வெற்றி பெறலாம். மன நலத்தில் மேம்பாடு, பெற்றோர் ஆதரவு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி, புதன் ஆசியால் கோடீஸ்வர யோகம் உள்ள 3 ராசிகள்..!

மேலும் படிக்க | மகாசிவராத்திரி 2025: பூஜையும் விரதமும்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News