)
குரு தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், ஜூன் 2 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் குரு மிகவும் முக்கியமான ஒரு கிரகமாக கருதப்படுகிறது. குரு பகவானின் ஒவ்வொரு அசைவுகளும் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. அறிவு, செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக இருக்கும் குரு, தற்போது மிதுன ராசியில் உள்ளார். இவர் வரும் ஜூன் 2 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இந்த குரு பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களை அனுபவிக்க இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்
குரு மேஷ ராசியின் 4ம் வீட்டில் பயணிக்க இருக்கிறார். இதனால் இந்த காலகட்டம் மிகவும் அற்புதமாக இருக்கும் என நம்பப்படுகிறது. வீடு, வாகனம், சொத்து வசதிகள் அதிகரிக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இடத்தில் அதை உயர்வுக்கு வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குருவின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபத்தை தர இருக்கிறது. இந்த காலகட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம். அது அவர்களுக்கு நல்ல லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே சமயம் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். மேலும், வேலை இடத்தில் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம்.
குரு மிதுன ராசியின் 2ம் வீட்டில் பயணம் செய்ய இருக்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற இருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை இருந்த பணப் பிரச்சனை தீர்ந்து சேமிப்பு அதிகரிக்கும். உங்களின் பேச்சு திறனால் பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும். போட்டி தேர்வுகளுக்கு தயாராபவர்களுக்கு அதில் வெற்றி அடைய முடியும்.
குரு கடக ராசிக்கு பெயர்ச்சியாவது இந்த ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிகளை விட சிறந்த காலமாக இது அமையும். குரு உச்சத்தில் இருப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும் புதிய வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும். குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறலாம். மேலும் உடல் நலத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியம் மேம்படும்.
குருவின் கடக ராசிக்கு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவை அதிகரிக்க செய்கிறது. இந்த காலகட்டத்தில் கடன் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெரும் மூச்சி அடைய முடியும். வேலை மாற நினைப்பதற்கு இது சரியான காலமாகும். அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலும் காதலித்து வருபவர்களுக்கு பிரச்சனை இன்றி திருமணம் கைகூடும்.
கன்னி ராசிக்காரர்கள் குருவின் பெயர்ச்சியால் பணவரவு மற்றும் தொழிலில் வளர்ச்சி அடைய இருக்கின்றனர். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். பண விஷயத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதனால் சேமிப்புகளும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறவுகள் மேம்படும். புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். புது வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் உள்ளது.
குருவின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலத்தை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் சவால்கள் இருந்தாலும், புதிய பொறுப்புகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்கும். இருப்பினும் செலவுகளில் கவனமாக இருத்தல் அவசியம்.
குரு விருச்சிக ராசியின் 9ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் தடைபட்டிருந்த பல வேலைகள் நிறைவடையும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு பலன் தரும். அதிஷ்டம் அதிகரிக்கும் உயர் கல்வி, வெளிநாடு பயணங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் இருக்கும் மரியாதை உயரும்.
குரு தனுசு ராசியின் 8ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு தனுசு ராசியின் அதிபதி என்பதால், இந்த ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். வெளிநாட்டு தொடர்பான வேலைகள் வெற்றி பெறும். புதிய தொடக்கங்கள் மற்றும் பயண வாய்ப்புகள் உருவாகும். மேலும் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். குரு உங்கள் 7ம் வீட்டுக்குள் நுழைகிறது. வேலையில் அழுத்தம் அதிகரிக்க கூடும். இதனால் உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளதால் அதனை பேணிக்காப்பது அவசியமாகிறது. அதே சமயம் தொழிலில் ஈடுபடும் பட்டு வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கூட்டுத் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குரு கும்ப ராசியின் 6ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் நேர்மறையான பலன்களை அனுபவிக்க இருக்கின்றனர். தொழில் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். படைப்பாற்றல் அதிகரிக்கும். அதில் பல வெற்றிகளை பெறுவீர்கள். மேலும் காதல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம்.
குரு மீன ராசியின் 5ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு நன்மைய அளிக்கும். நிதி ஆதாயங்கள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அது கைக்கூடும்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.