மீனத்தில் குருவின் பெயர்ச்சி: அவ்வப்போது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் நல்ல விளைவுகளாகவும் இருக்கலாம், தீய தாக்கங்களையும் ஏற்படுத்தலாம். இந்த பலன்கள் ராசிக்கு ஏற்றவாறு வேறுபடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின்படி, தேவகுரு வியாழன் 2022 ஏப்ரல் 13 அன்று தனது சொந்த ராசியான மீனத்தில் பிரவேசித்துள்ளார். 22 ஏப்ரல் 2023 வரை அவர் இங்கு இருப்பார். குருவின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. இந்தக் காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு கிட்டும். வியாழன் கிரகம் தனது ராசியை மாற்ற ஒரு வருடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


அறிவாற்றல், குழந்தைகள், திருமண வாழ்க்கை, தொழில் போன்றவற்றின் காரணியாக வியாழன் கிரகம் கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்ற நிலையில் இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்துள்ளதால் இந்த 4 ராசிக்காரர்கள் பம்பர் பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த 4 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்:


இந்த ஒரு வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், கௌரவம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். அதே நேரத்தில், சொத்து அல்லது நிலம் போன்றவற்றால் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும். ஆன்மீக பணிகளில் ஈடுபவடுவீர்கள். 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, வெற்றிவாகை சூடுவார்கள் 


ரிஷபம்:


இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக நல்ல வகையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. சொத்து வாங்கவும் செல்வம் பெருகவும் தற்போது யோகம் உள்ளது. எனினும், இந்த ராசிக்காரர்கள் லாட்டரி, பந்தயம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்ன பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் குடும்ப சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குரு உங்கள் பக்கம் இருப்பது அனைத்து வேலைகளிலும் வெற்றியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.


கும்பம்:


கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். குருவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது நேரம் சாதகமாக உள்ளது. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Planet Transit 2022:செவ்வாயின் அருளால் ஜூலை 4க்குள் புதிய பணி மற்றும் பதவி உயர்வு பெறும் யோக ராசிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR