)
Jupiter Transit In Cancer: வருகிற அக்டோபர் 18, 2025 அன்று, குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார். ஜோதிடத்தில் குரு மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. இது அறிவு, கல்வி, மத நடவடிக்கைகள், குழந்தைகள், மூத்த சகோதரர்கள், தர்மம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பான கிரகம் என்று கூறப்படுகிறது. குரு புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரகளை ஆளும் கிரகமாகும். இந்த நட்சத்திரங்களை கொண்டவர்கள் குருவிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். ஜோதிடர்களின்படி, குரு கடக ராசிக்குள் நுழையும் போது, சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் மற்றும் சமூக கௌரவம் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. கடக ராசியில் குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், புதிய வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும். இந்நிலையில் நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிந்துக்கொள்வோம்.
மேஷம் - மேஷ ராசிக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், மேலும் வேலையில் நேர்மறையான சூழ்நிலையைக் காண்பீர்கள். வணிகம் மற்றும் வாழ்க்கையில் புதிய பாதையை வகுக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. பழைய நண்பர்களைச் சந்திப்பது அல்லது நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபம்: குரு கடக ராசியில் பெயர்ச்சி அடையும் போது நீங்கள் தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம், மற்றவர்கள் தங்கள் குடும்பத்தினருடன், குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிட வீட்டிலேயே இருப்பார்கள். புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களும் நல்ல செய்திகளும் கிடைக்கக்கூடும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கும் பயணம் செய்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் மேலதிகாரிகள் மகிழ்ச்சியடைவார்கள், அதுமட்டுமின்றி மரியாதையும் அதிகரிக்கக்கூடும்.
கடகம்: குரு பெயர்ச்சி 2025, கடக ராசியில் உங்கள் முதல் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த நேரமாக இருக்கும்.
சிம்மம் - குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வேலையில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும், வியாபாரத்தில் முன்னேற்றமும் ஏற்படும். கலை அல்லது படைப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி: கடகத்தில் குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும், பல மடங்கு லாபம் வலுவடையும். இந்த நேரத்தில் நீங்கள் எதைத் தொடங்கினாலும் அதில் வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள், தொழில் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக இருக்கும், மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்வுகள் மற்றும் வேலை பதவி உயர்வுகளை பெறலாம். கடினமாக உழைத்து, புத்திசாலித்தனமாக உழைத்தால், உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியை நீங்கள் நிச்சயமாக அடைவீர்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும், ஆனால் உங்கள் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பீர்கள்.
தனுசு: குருவின் சக்தி இந்த நேரத்தில் உங்களுக்கு பொருத்தமான அறிவையும் அனுபவத்தையும் வழங்கும், நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளை எடுக்கவும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு கடகத்தில் குரு பெயர்ச்சியின் தாக்கத்தை 7 வது வீடான திருமணம் மற்றும் உறவுகளுக்கான வீடாக உணருவீர்கள். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும், வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவீர்கள். உயர்ந்த இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்தவும்.
கும்பம்: உங்கள் பணிக்கு ஒரு வலுவான ஆண்டாக இருக்கலாம். புதிய வேலை அல்லது பதவி கிடைக்கலாம். தலைமைப் பதவியை ஏற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு பல பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மீனம்: குரு கடக ராசியில் பெயர்ச்சி அடையும் போது உண்மையான காதலை சந்திப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். இதனால் குடும்பம் விரிவடையும். உங்கள் புகழ்பெற்ற படைப்பாற்றல் மிகப்பெரிய ஊக்கத்தைப் தரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ