குரு மற்றும் சுக்கிரன் அல்லது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பரஸ்பரம் 60 அல்லது 120 டிகிரி கோணத்தில் இணைந்து இருக்கும் போது இலாப திருஷ்டி யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில், இந்த யோகம் நல்ல பலன்களை தரக்கூடிய சிறந்த யோகமாக கருதப்படுகிறது.

இலாப திருஷ்டி யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில், குறிப்பிட்ட கிரக சேர்க்கைகள் மூலம் ஏற்படும் ஒரு அரிய யோகம். இது, குரு மற்றும் சுக்கிரன் அல்லது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பரஸ்பரம் 60 அல்லது 120 டிகிரி கோணத்தில் இணைந்து இருக்கும் போது உருவாகிறது. இந்த யோகம் நல்ல பலன்களை தரக்கூடிய சிறந்த யோகமாக கருதப்படுகிறது. குறிப்பாக வேலையில், தொழிலில் வருமானம் இலாபம் ஆகியவை சிறப்பாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
ஜோதிடத்தில் குரு பகவான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் நிலையில், சுக்கிரன் அசுரர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். மற்ற கிரகங்களைப் போலவே, இந்த இரு கிரகங்களின் இணைவுகளும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கும். இப்போது குரு சுக்கிரன் இரண்டும் ஜூன் 5 அன்று ஒரு தனித்துவமான இணைவை உருவாக்குகின்றன. இந்த நாளில், அவை இரண்டும் 60 டிகிரி கோணத்தில் பரஸ்பரம் இணைந்திருக்கும். இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இந்த கோண இணைப்பு இலாப திருஷ்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த இணைவின் காரணமாக, பல ராசிகளின் அதிர்ஷ்டம் ஜூன் 5 முதல் பிரகாசிக்கப் போகிறது. அவர்கள் திடீரென்று மிகப்பெரிய பண ஆதாயங்களையும், பதவி உயர்வையும் பெறுகிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
குரு - சுக்கிரன் இணைவினால் ஜாக்பாட் பலன்களை பெறும் சில ராசிகள்
துலாம் ராசிக்கான பலன்கள்
குரு மற்றும் சுக்கிரனின் இந்த இணைவு துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவடையத் தொடங்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் மனம் ஆன்மீகப் பணிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக நீங்கள் மன அமைதியை உணர்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகளும் நீங்கும்.
தனுசு ராசிக்கான பலன்கள்
குரு மற்றும் சுக்கிரனின் இணைவினால் இலாப திருஷ்டி யோகம் உருவாகுவதால், ஜூன் 5 க்குப் பிறகு உங்களுக்கு பொன்னான நேரம் தொடங்கப் போகிறது. நீங்கள் கை வைத்த காரியம் அனைத்திலும், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது. புதிய திட்டத்தைத் தொடங்க இது சிறந்த நேரமாக இருக்கும். பழைய முதலீட்டிலிருந்து நல்ல வருமானத்தைப் பெறலாம். வெளிநாட்டுப் பயணம் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறும். பல ஆண்டுகளுக்குப் பிறகு பல பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். இது மனதிற்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
கும்ப ராசிக்கான பலன்கள்
குரு - சுக்கிரனின் இலாப திருஷ்டி யோகம் உங்கள் வாழ்க்கையில் செல்வத்தையும் மகிழ்ச்சியைத் தரும். இந்த யோகத்தின் காரணமாக, உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரித்து, பண வரவு அடிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை தொடர்ந்து மேம்படும். உங்கள் பேச்சால் மற்றவர்களின் மனதை கவர்ந்து, காரியத்தை சாதித்து கொள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அலுவலக வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது.புதிய இடத்திலிருந்து வேலை வாய்ப்பையும் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ