பூரத்தில் கேது பெயர்ச்சி... 2026 ஜனவரி வரை இந்த ராசிகளுக்கு ராஜயோக பலன்கள்

கேது பெயர்ச்சி 2025: சர்ப்ப கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் கேது, வரும் 2025 ஜூலை மாதம் 20ஆம் தேதி அன்று, பூர நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். வரும் 2026 ஜனவரி மாதம் 25ஆம் தேதி வரை பூர நட்சத்திரத்தில் அவர் நீடிப்பார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2025, 12:20 PM IST
  • கேது வரும் 2025 ஜூலை மாதம் 20ஆம் தேதி அன்று, பூர நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
  • சில ராசிகளுக்கு பொருள் செல்வம், மகிழ்ச்சி புகழ் என அனைத்தும் கிடைக்கும்.
  • கேது பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும்.
பூரத்தில் கேது பெயர்ச்சி... 2026 ஜனவரி வரை இந்த ராசிகளுக்கு ராஜயோக பலன்கள்

கேது பெயர்ச்சி 2025: சர்ப்ப கிரகம் அல்லது நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் கேது, வரும் 2025 ஜூலை மாதம் 20ஆம் தேதி அன்று, பூர நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். வரும் 2026 ஜனவரி மாதம் 25ஆம் தேதி வரை பூர நட்சத்திரத்தில் அவர் நீடிப்பார். இதனால் சில ராசிகளுக்கு பொருள் செல்வம், மகிழ்ச்சி புகழ் என அனைத்தும் கிடைக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். கேதுவின் பூர நட்சத்திர பெயர்ச்சியால் பலன் அடையும் ராசிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

ரிஷப ராசிக்கான கேது பெயர்ச்சி பலன்கள் (Taurus Zodiac Sign)

கேது பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். பணியில் புதிய பொறுப்புகளுடன் சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். பண வரவிற்கு குறைவிருக்காது. எனவே நிதிநிலை சிறப்பாகவே இருக்கும். நெருக்கமானவர்களின் மூலம், வாழ்க்கையில் முக்கிய மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும். மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குறுகிய தூர பயணங்கள் செல்லலாம். இதனால் ஆதாயமும் கிடைக்கும். திய செல்வாக்கு மிக்க நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

மிதுன ராசிக்கான கேது பெயர்ச்சி பலன்கள்  (Gemini Zodiac Sign)

அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சுப காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பு ஏற்படும். முயற்சிகளுக்கான பலன்கள் சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசிக்கான கேது பெயர்ச்சி பலன்கள்  (Aquarius Zodiac Sign)

வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும். படைப்பாற்றல் நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் வணிகர்கள் லாபத்தை குவிப்பார்கள். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். எதிர்பாராத உதவி மற்றும் ஆதரவு கிடைக்கக்கூடும். தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன் மேம்படும். 

ராகு - கேது பெயர்ச்சி 2025

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் முன்னதாக, மே 18, 2025 அன்று முறையே கும்பம் மற்றும் சிம்ம ராசியில் ராசிக்குள் நுழைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை பாதிக்கும் கண் திருஷ்டி... நீங்க உதவும் சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | ஜூலை 9 குருவின் மகா நிகழ்வு.. 3 ராசிகளுக்கு ஓஹோ வாழ்க்கை, ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News