இன்னும் 4 நாட்களில் கேது பெயர்ச்சி: ராஜ யோகம், அதிர்ஷ்டம், பண மழை இந்த ராசிகளுக்கு

Ketu Peyarchi 2025: மே 19, 2025 அன்று கேது தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் கேது சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். இதனால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2025, 09:16 PM IST
  • பணி பாராட்டப்படும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
  • உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
இன்னும் 4 நாட்களில் கேது பெயர்ச்சி: ராஜ யோகம், அதிர்ஷ்டம், பண மழை இந்த ராசிகளுக்கு

Ketu Peyarchi 2025: ஜோதிடத்தில் கேதுவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. கேதுவின் தாக்கத்தை கண்டு பலர் கிடுத்கிடுத்துவிடுவார்கள். ஆனால் கேது அசுப பலன்களை மட்டுமே தரும் கிரகம் கிடையாது. கேது கிரகம் நல்ல பலன்களைத் தரும். கேது சுப ஸ்தானத்தில் குடியேறினால் அந்த ராசி நபரின் வாழ்க்கையில் செல்வம் உயரும். அதன்படி மே 19, 2025 அன்று கேது தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் கேது சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிடத்தின் படி, கேதுவின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். எனவே கேதுவின் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.

மேஷம் - பொருள் மகிழ்ச்சியும் செல்வ மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய நபர்களைச் சந்திப்பீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலனை பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்தும் ஆளும் கட்சியிடமிருந்தும் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். பணி பாராட்டப்படும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபம் - அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். 

மிதுனம் - நிதி நெருக்கடி நேரிடும். திருமணத்தில் தாமதம் ஏற்படும். மாமியார் தரப்பில் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகளால் மனம் கலங்கும். உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.

கடகம் - நீண்ட நாட்களாக சிக்கிக் கிடைந்த பணம் திரும்பக் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். திருமண வாழ்க்கையில் இனிமை வரும்.

சிம்மம் - பணம் வரவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்படும். 

கன்னி - பேச்சில் இனிமை இருக்கும். குடும்பத்தினருடன் சில மத ஸ்தலங்களுக்குச் செல்லலாம். நிதி ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

துலாம் - குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வெற்றியைப் பெறுவீர்கள். எதிரியை வெல்வீர்கள்.

விருச்சிகம் - குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். வீட்டில் மத நிகழ்வுகள் நடக்கலாம். மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

தனுசு: ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வீர்கள், மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். நிதி நிலைமை வலுவடையும், கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம் - திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றி பெறும். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம்.

கும்பம் - கேதுவின் ராசி மாற்றத்தால், கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல்நலத்தில் சில எச்சரிக்கை தேவை.

மீனம் - புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 4 கிரகங்களின் வலுவான சஞ்சாரம்: பொக்கிஷ அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் 3 ராசிகள்!

மேலும் படிக்க | ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News