Grahana Yogam: சிம்ம ராசியில் உருவாகும் கேது மற்றும் சந்திரன் இணைவு, சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்கும் என்றும், இதனால் உருவாகும் கிரகண யோகம் என்னும் பாதகமான யோகம் பண இழப்பை ஏற்படுத்தலாம் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Ketu Transit 2025: சிம்ம ராசியில் உருவாகும் கேது மற்றும் சந்திரன் இணைவு, சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்கும் என்றும், இதனால் உருவாகும் கிரகண யோகம் என்னும் பாதகமான யோகம் பண இழப்பை ஏற்படுத்தலாம் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சனிக்கிழமை ஜூன் 29ஆம் தேதி அன்று, சிம்ம ராசியில் சந்திரன் பெயர்ச்சி அடைகிறார். கேது ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், கேது மற்றும் சந்திரன் இணைந்து கிரகண யோகம் உருவாகிறது. செவ்வாயும் சிம்ம ராசியில் இருப்பதால், இரண்டு உக்கிர ராசிகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் சந்திரன், பாதகமான பலன்களை கொடுக்கக்கூடும்.
கிரகண யோகத்தால் பாதிக்கப்படும் ஐந்து ராசிகள்
மேஷ ராசி
மேஷ ராசியினருக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண இழப்புடன் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. இல்லை என்றால் தடைகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
கடக ராசி
கடக ராசிக்கு அதிபதியான சந்திரன் கிரகணத்தில் சிக்கிக் கொள்வதால் மனக்குழப்பத்தை சந்திக்க நேரிடும். நீதி இழப்பு காரணமாக மன உளைச்சலும் அதிகரிக்கலாம். தவறான முடிவுகள் காரணமாக தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. சளி இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இது இயல்பு வாழ்க்கையை சிறிதளவு பாதிக்கலாம்.
சிம்ம ராசி
சிம்ம ராசியினருக்கு கிரகண யோகம் காரணமாக மனக்குழப்பம் அதிகரிக்கும். உடல்நல கோளாறுகளும் உண்டாகும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், முக்கிய முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பணியிடத்திலும் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அதனால் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.
மகர ராசி
மகர ராசியினருக்கு திடீர் பண இழப்பை ஏற்படுத்தி மனதில் பதற்றத்தை உண்டாக்கலாம். தேவையற்ற பயணங்கள் மூலம் செலவுகள் அதிகரிக்கலாம். உடலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் காண வேலைகளை செய்வதை தவிர்க்க முயற்சி செய்வது நல்லது.
மீன ராசி
மீன ராசியினருக்கு கிரகண யோகம் காரணமாக நிதி இழப்பு ஏற்படுவது உடன், மன சச்சலமும் அதிகரிக்கும். வருமானம் சிறிது அதிகரிக்கும் என்றாலும், செலவுகள் அதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் பணத்தை சேமிப்பது என்பது சவாலான விஷயமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால், அனாவசிய வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.