ஜனவரி 25 கேது பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், வாழ்க்கை மாறப்போகுது!!

Ketu Transit: ஜனவரி 25, 2026 அன்று கேதுவின் நிலை மாறும். இது 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 15, 2026, 05:38 PM IST
  • கேது நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • தொழில்நுட்ப மற்றும் படைப்புத் துறைகளில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.
ஜனவரி 25 கேது பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், வாழ்க்கை மாறப்போகுது!!

Ketu Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். கேது விடாமுயற்சி, ஆன்மீக சிந்தனை, கடின உழைப்பு, பயிற்சி, நற்சிந்தனை ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். கேதுவின் பெயர்ச்சி பெரும்பாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 

Add Zee News as a Preferred Source

Ketu Nakshatra Transit: கேது நட்சத்திர பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கேது நிழல் கிரகமாக கருதப்படுகிறார். வாழ்வில் கேதுவின் தாக்கங்கள் திடீரெனவும், ஆழமாகவும் தெரியும். ஜனவரி 25, 2026 அன்று, கேது பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி ஆவார். இந்த நிலையில் கேதுவின் இயல்பு சுபமானதாகவும், அதிக பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.

கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இது அதிக அளவிலான நன்மைகளை அள்ளித்தரும். இந்த ராசிகளுக்கு வெற்றிகள் குவியும், பொற்காலம் பிறக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். ஜனவரி 25 முதல் அற்புதமான நன்மைகளையும், நிதி ஆதாயத்தையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அனுபவிக்கவுள்ள 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries): நல்ல வேலை கிடைக்கும்

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். திடீர் தொழில் முன்னேற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் சாத்தியமாகும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முதலீடுகள் அல்லது புதிய தொழில்களில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கல்வி மற்றும் போட்டித் துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பழைய சச்சரவுகள் தீர்க்கப்படலாம்.

ரிஷபம் (Taurus): சிந்தனையில் நேர்மறையான மாற்றம் 

கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகளை அளிக்கும். தொழில் மற்றும் வேலையில் இருந்த தடைகள் விலகி அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் சாத்தியமாகும். வாழ்வில்  நேர்மறையான மாற்றம் ஏற்படும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும்.

கன்னி (Virgo): தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சாதகமான நேரம்

கன்னி ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியின் போது திடீர் நிதி ஆதாயங்களை அடையலாம். வேலைகள் மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பழைய முதலீடுகள் லாபத்தைத் தரும். மன அழுத்தம் குறையும், ஆரோக்கியம் மேம்படும். இந்த நேரம் ஆன்மீக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சாதகமான நேரமாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். படைப்பு வேலை மற்றும் கலைகளில் ஈடுபடுபவர்கள் சிறப்பு வெற்றியை அடையலாம்.

தனுசு (Sagittarius): தன்னம்பிக்கை அதிகரிக்கும்

தனுசு ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். கேதுவின் நல்ல செல்வாக்கு அவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். தடைபட்ட திட்டங்கள் வெற்றி பெறும், மேலும் திடீர் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்படும். தேங்கி நிற்கும் பழைய திட்டங்களின் வேகம் அதிகரிக்கும். உறவுகளில் ஆதரவு அதிகரிக்கும். பயணம் அல்லது புதிய தொடர்புகளால் ஆதாயங்கள் உண்டாகும்.

கும்பம் (Aquarius): குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும்

கேது நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். தொழில்நுட்ப மற்றும் படைப்புத் துறைகளில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இப்போது தொடங்கும் புதிய திட்டங்கள் வெற்றியை அளிக்கும். லாட்டரி அல்லது பங்குச் சந்தையில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் பேசும் போது கவனம் தேவை.

கேது அருள் பெற

கேது பகவானின் அருள் பெற்று, வாழ்வில் அனைத்து வித செல்வங்களையும் வெற்றிகளையும் பெற, "ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ: கேது ப்ரசோதயாத்" என்ற கேது காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உத்ராயன புண்யகாலம்: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்... வடதிசையில் பயணிக்கும் சூரியன்

மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: இன்று முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும்... மேஷம் முதல் மீனம் வரை முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News