லட்சுமி நாராயண யோகம்! கோடிகளில் புரளும் 3 ராசிகள்.. இன்று முதல் பொற்காலம், பணம் கொட்டும்

Lakshmi Narayana Yogam: ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 6ஆம் தேதியான இன்று லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால், இன்று முதல் 3 ராசிகளின் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.   

Written by - Umabarkavi K | Last Updated : Feb 6, 2026, 06:10 PM IST
  • லட்சுமி நாராயண யோகம்
  • 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
  • யாருக்கெல்லாம் தெரியுமா?
லட்சுமி நாராயண யோகம்! கோடிகளில் புரளும் 3 ராசிகள்.. இன்று முதல் பொற்காலம், பணம் கொட்டும்

Lakshmi Narayana Yogam: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். இந்த நேரத்தில் சில மங்களகரமான யோகங்களும் உருவாகிறது. இந்த யோகங்களால் 12 ராசிகளக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். குறிப்பாக, செல்வம், புகழ் உங்களை  தேடி வரும். அந்த வகையில், இன்று (பிப்ரவரி 6) லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

லட்சுமி நாராயண யோகம்

அதாவது, கும்ப ராசியில் இன்று சுக்கிரன் நுழைந்துள்ளார். கும்ப ராசியில் ஏற்கனவே, புதன் கிரகம் உள்ளது. எனவே, புதனும் சுக்கிரனும் இணையும்போது, இந்த லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. எனவே, இன்று கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்த நிலையில், ஏற்கனவே, கும்ப ராசியில் உள்ள புதனும் சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்கி உள்ளன. 

இந்த சக்திவாய்ந்த ராஜயோகத்தால் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள், வெற்றிகள், முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, கும்ப ராசியில் உருவாகிய இந்த லட்சுமி நாராயண யோகத்தால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு செல்வம், செழிப்பு, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம். 

கன்னி (Virgo)

லட்சுமி நாராயண யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை கொடுக்கும். அவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறப்படும். மேலும், முதலீடுகளில் இருந்து அதிக லாபத்தை பெறுவீர்கள். மேலும், பணியிடத்தில் உங்களுக்கான புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானமும் உயரக் கூடும். நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.  குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி செல்வம் அதிகரிக்கும். உங்கள பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தியை கேட்பீர்கள். காதல் வாழ்க்கையில் நல்ல செய்தியை கேட்க வாய்ப்புள்ளது. 

தனுசு (Sagittarius)

லட்சுமி நாராயண யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும். உறவினர்கள், குடும்பத்தினரிடையே இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்து. உங்கள் துணையின் ஆதரவுடன் விருப்பமான பணிகளை மேற்கொள்வீர்கள்.  காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பங்கள் இருக்கும். பெற்றோர் அனுமதியுடன் விரைவில்  திருமணம் முடிக்க வாய்ப்புகள். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலையில்லாவர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை கேட்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து, அதிக வருமானத்தை பெறுவீர்கள். இதன் மூலம் உங்களது பழைய கடன்கள் அடையும். 

கும்பம் (Aquarius)

லட்சுமி நாராயண யோகத்தால் கும்ப ராசிகளுக்கு பணம், செல்வம், புகழ் பெருகும். நீங்கள் நினைத்த காரியங்களை திட்டமிட்டப்படி முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கிறது.  அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சாதகமான விஷயங்கள்  நடக்கும். மேலும், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அதிக வாய்ப்புகள்ளது. தொழில் செய்து வரும் நபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற பலன்கள் தொழில், பணியிடத்திற்கு கிடைக்கும். பணியிடத்திற்கு உங்களுக்கு  புதிய பொறுப்புகள். நீங்கள் வெளிநாடு செல்ல கூட வாய்ப்புள்ளது. மேலும், வீடு, சொத்து, நகை வாங்க அதிக வாய்ப்புள்ளது. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

மேலும் படிக்க: சனியின் அஸ்தமனம்.. மார்ச் முதல் பெரிய பிரச்சனைகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்!

மேலும் படிக்க: தசாங்க யோகம்: சனி, சுக்கிரன் அருளாள் 4 ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கை.. நகை, பணம் சேரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News