இன்றைய ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள்! யாருக்கு தெரியுமா?

Tamil Rasi Palan Today On 3rd March 2025 : 12 ராசிகளுக்கும், அவரவர்களின் கிரகப்பலன்களுக்கு ஏற்றவாறு இன்றைய நாள் அமையும். அப்படி, மார்ச் 3ஆம் தேதியான இன்று உங்கள் நாள் எப்படியிருக்கப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாமா?

Written by - Yuvashree | Last Updated : Mar 3, 2025, 06:53 AM IST
  • மார்ச் 3, 2025 ராசி பலன்
  • 4 ராசிகளுக்கு அமோகமான நாள்..
  • அவை எந்தெந்த ராசிகள்?
இன்றைய ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள்! யாருக்கு தெரியுமா?

Tamil Rasi Palan Today On 3rd March 2025 : மார்ச் 3ஆம் தேதியான இன்று, மேஷ ராசி தொடங்கி மீன ராசி வரை யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

மேஷம்:

வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்துச் செயல்படவும். புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அஸ்வினி : தட்டிக்கொடுத்துச் செயல்படவும். 
பரணி : புரிதல் ஏற்படும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.

ரிஷபம்:

குழந்தைகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். செலவு நிறைந்த நாள்.

கிருத்திகை : புரிதல்கள் மேம்படும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

மிதுனம்:

செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : முடிவுகள் கிடைக்கும்.

கடகம்:

பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிறுதூர பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
பூசம் : தெளிவுகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் :  மாற்றம் பிறக்கும்.

சிம்மம்:

உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் வர்த்தக செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரம் : அலைச்சல் ஏற்படும். 

கன்னி:

உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.

உத்திரம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
அஸ்தம் : சோர்வான நாள்.
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

துலாம்:

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பயம் மறையும் நாள்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : வரவுகள் கிடைக்கும். 

விருச்சிகம்:

நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். சேமிப்பு விசயங்களில் ஆலோசனை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தெளிவுகள் பிறக்கும் நாள்.

விசாகம் :  ஆலோசனை கிடைக்கும். 
அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 
கேட்டை : புரிதல் உண்டாகும்.

தனுசு:

கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறதி நிறைந்த நாள்.

மூலம் :  குழப்பங்கள் நீங்கும்.
பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திராடம் :  மாற்றமான நாள்.

மகரம்:

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

உத்திராடம் : புரிதல்கள் அதிகரிக்கும். 
திருவோணம் : ஆர்வமின்மை குறையும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.

கும்பம்:

எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். அசதி நிறைந்த நாள்.

அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.
சதயம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.

மீனம்:

வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை தரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

பூரட்டாதி : கையிருப்புகள் அதிகரிக்கும். 
உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.    

 

மேலும் படிக்க | சுக்கிரனின் வக்ர நிலை: அடுத்த 90 நாள்கள்... இந்த 4 ராசிகளின் வாழ்க்கை ஜெக ஜோதியாய் ஜொலிக்கும்!

மேலும் படிக்க | சாதனையின் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்..இனி இவர்களைத் தடுக்கவே முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News