குரு நட்சத்திர பெயர்ச்சி: பொற்காலம், வெற்றி மேல் வெற்றி இந்த ராசிகளுக்கு

Jupiter Star Transit: குரு நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை தரும். இந்த நட்சத்திர பெயர்ச்சி மிருகசீரிட நட்சத்திரத்தில் நடக்க உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 31, 2025, 08:14 PM IST
  • வணிக ரீதியாக நன்மைகள் உண்டாகும்.
  • திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.
  • புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம்.
குரு நட்சத்திர பெயர்ச்சி: பொற்காலம், வெற்றி மேல் வெற்றி இந்த ராசிகளுக்கு

ஜோதிடத்தின் படி, குரு பகவான் செல்வம், அறிவு, செழிப்பு, கல்வி, குழந்தை பாக்கியம் போன்றவற்றை அள்ளித் தருபவர் ஆவார். குரு தனது இடத்தை மாற்றும் போதெல்லாம் 12 ராசியிலும் இதன் பாதிப்பை பார்க்கக்கூடும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலனையும், அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு கலவையி ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் வருகிற ஏப்ரல் 10, 2025 அன்று, மாலை 7:51 மணிக்கு, குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.

Add Zee News as a Preferred Source

இந்த மிருகசீரிட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். தற்போது இந்த நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நிதி நிலை, தொழில் மற்றும் சொத்துக்களை அள்ளி வழங்கும். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்கள பலனைத் தருவார். மிருகசீரிட நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார். எனவே இந்தப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு என்ன விளைவை ஏற்படுத்துவார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்கு, இந்தப் பெயர்ச்சியால் நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் திருபங்கள் கொண்டுவரும். தொழிலில் பெரிய முதலீடு செய்வீர்கள் இதனால் லாபம் உண்டாகும். இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமாக இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும், புதிய வழியில் வருமான பெருகும். இந்த நேரம் சிறப்பாக இருக்கும். வணிக ரீதியாக நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்: ​​ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வணிகத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் இது. இதனால் லாபம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வேலையில் சேரலாம். இந்தப் பெயர்ச்சிக்கு பின்னர் திருமணம் நடக்கலாம். திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.

மிதுனம்: குருவின் இந்தப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன் உண்டாகும். அரசு வேலையில் கிடைக்கலாம். அதிர்ஷ்டம் பெருகும். நிதி நிலை வலுவடையும். கடின உழைப்பால் பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம், இதனால் புதிய உயரத்தை தொடலாம். இது தவிர, சொத்து மற்றும் முதலீடு மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்தப் பெயர்ச்சியால் வெளிநாடு பயணம் கிடைக்கலாம். தொழிலிலும் நல்ல மாற்றங்கள் காணலாம். புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நன்மை உண்டாகும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, இந்தப் பெயர்ச்சியால் போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். வெற்றிகள் குவியும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். ரியல் எஸ்டேட் மூலம் பெரும் லாபத்தைத் தரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய உறுப்பினர் வீட்டிற்கு வரலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் மார்ச் 30 ஞாயிறு : சனிப்பெயர்ச்சிக்கு பிறகு முதல் நாள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: இனி இந்த ராசிகள் பாடாய் படப் போகிறார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News