சனி, சுக்கிரன், புதன் சேர்க்கை.. பணம், ராஜ பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு

Trigrahi Yogam: ஜோதிடத்தின் படி, மீன ராசியில் புதன் பெயர்ச்சியால் திரிகிரகி யோகம் உருவாக்கப் போகிறது. இந்த யோகம் ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 15, 2025, 06:20 PM IST
  • சுப பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
  • நிதி நிலையில் அதிகரிப்பு காணலாம்.
  • தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
சனி, சுக்கிரன், புதன் சேர்க்கை.. பணம், ராஜ பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு

Trigrahi Yogam in Pisces Zodiac: ஜோதிடத்தின் படி, புதன் பெயர்ச்சி மீன ராசியில் நிகழநதுள்ளது. இதனால் திரிகிரகி யோகம் உருவாக்கப் போகிறது. இந்த திரிகிரகி யோகம் ரிஷபம் உட்பட ஐந்து ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும். அதன்படி நேற்று அதாவது ஏப்ரல் 14 அன்று, கிரங்களின் இளவரசரான புதன் மீன ராசிக்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசியில் ஏற்கனவே சனியும் சுக்கிரன் பயணித்து வருகிறார். எனவே, சனி, புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெற்றுள்ளது. புதன், சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரகி யோகம் உருவாகி 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும். எனவே இந்த திரிகிரகி யோகத்தால், ரிஷபம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பு நிதி நன்மைகள், பொருளாதார நன்மைகளை பெறுவார்கள். எனவே எந்த ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகத்தால் சுப பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign): திரிகிரகி யோகத்தால் ரிஷப ராசிகார்களுக்கு வேலை மற்றும் தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். கல்வி படிக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கடுமையான நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிக பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நிதி நிலையில் அதிகரிப்பு காணலாம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): திரிகிரகி யோகத்தால் மிதுன ராசிகார்களுக்கு தொழிலில் மிகப்பெரிய நன்மைகளை பெறலாம். சமூக அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். உங்களின் கலை நடை மேம்படும். குடும்பத்தில் பெற்றோரிடமிருந்து நிதி உதவி பெறலாம். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். முதலீடு மூலம் லாபம் பெறலாம். மன அழுத்தம் நீங்கும். தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம் (Leo Zodiac Sign): திரிகிரகி யோகத்தால் சிம்ம ராசிகார்களுக்கு பணம் மழை கொட்டும். திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் நிதி நிலைமை வலுவாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். நிதி ஆதாயமும் உண்டாகலாம்.

துலாம் (Libra Zodiac Sign): திரிகிரகி யோகத்தால் துலாம் ராசிகார்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். முதலீடு மூலம் லாபத்தைத் தரும். குடும்பத்தில் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வணிக மூலம் நிதி நிலைமை மேம்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில நல்ல செய்திகளை பெறலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு பெறலாம்.

தனுசு (Sagittarius Zodiac Sign): திரிகிரகி யோகத்தால் தனுசு ராசிகார்களுக்கு புதிய இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறலாம். தொழிலில் நிதி முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் சம்மந்தமாக பயணம் செய்யலாம், இதனால் நன்மை பயக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறலாம்.

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. கூரைய பிச்சிட்டு கொட்டப்போகும் பணம்!

மேலும் படிக்க | அட்சய திருதி அன்று இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்! வீட்டில் செல்வம் செழிக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News