Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கு ஒரு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் செவ்வாய் கிரகத்திற்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். வீடு, மனை, அறிவாற்றல், கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளார். ஆகையால், அவர் ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும்போதெல்லாம், மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை காண்கின்றனர்.
கிரகங்களின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். அந்தவகையில் இந்த வருடம், செவ்வாய் மற்றும் சனி இணைந்து ஒரு சிறப்பு ராஜயோகத்தை உருவாக்கப் போகின்றனர், இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எனவே அந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சனி-செவ்வாய் ராஜயோகத்தின் பலன்கள்
சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் ராஜயோக பலன் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தை தரும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், செழிப்பு மற்றும் வெற்றியை தரும். தொழில் வளர்ச்சி, தொழிலில் லாபம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்:
மேஷம்: இந்த ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலனைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வணிகம் வளர்ச்சியடையும். வியாபாரிகளுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரமும் விரிவடையும். சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த ராஜயோகத்தால் நிதி நிலை மேம்படும். பண ஆதாயம் உண்டாகும். பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது சாதகமாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த ராஜயோகத்தால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். வணிகத்தை விரிவுபடுத்தலாம். பொருளாதார நிலை வலுப்படும். வயதானவர்களுக்கு சில பழைய நோய்களின் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு நேரம் சாதமகாக உள்ளது. படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
மற்ற ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும்?
இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
சனி மற்றும் செவ்வாயின் அசுப பலனில் இருந்து விடுப்பட இதை செய்யுங்கள்:
சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிப்படவும்.
ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் தானம் செய்யுங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
தாமச விஷயங்களைத் தவிர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நாளை சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, பொற்காலம் ஆரம்பம்
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2025... கோடி நன்மைகளை பெறும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









