Chandra Grahanam | மார்ச் 14.. சந்திர கிரகணம் நேரம், பரிகாரம், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..

Chandra Kiraganam Astrology News: நாளை முதல் ஒவ்வொரு ராசிக்கும் முழு சந்திர கிரகணத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன? இந்திய நேரப்படி நாளை (மார்ச் 14) காலை 9:27 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3:30 மணிக்கு முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2025, 10:07 AM IST
  • மார்ச் 14 சந்திர கிரகணம்.
  • சந்திர கிரகணம் என்றால் என்ன?
  • சந்திர கிரகணம் நிகழும் நேரம் என்ன?
Chandra Grahanam | மார்ச் 14.. சந்திர கிரகணம் நேரம், பரிகாரம், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..  title=

Chandra Grahanam Latest News In Tamil: மார்ச் 14 ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம் என்ன? இந்த சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அதன் பரிகாரங்கள் என்ன? இந்த சந்திர கிரகணத்தின் போது நாம் செய்யக்கூடியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திரன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சந்திர கிரகணம் என்று பெயர். 

சந்திர கிரகணம் நிகழும் நேரம் என்ன?

இந்த நிகழ்வு பௌர்ணமி நாள் அன்று ஏற்படக்கூடியவை ஆகும். இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14 ஆம் தேதி காலை 9:27 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3:30 மணிக்கு முடிவடைகிறது. 

சந்திர கிரகணம் எங்கெல்லாம் பார்க்க முடியும்?

எங்கெல்லாம் இந்த சந்திர கிரகணம் தெரியும் எனப் பார்த்தால், அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கானா, நைஜீரியா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தெரியும். 

சந்திர கிரகணத்தின் போது கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் எது?

இந்த சந்திர கிரகணத்தின் போது கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் எதுவென்று பார்த்தால், மேஷம், சிம்மம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் ஆகும். 

சந்திர கிரகணத்தின் செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன?

சந்திர கிரகணத்தின் செய்யவேண்டிய எளிய பரிகாரம் என்ன என்றால், கிரகணத்தின் போது உங்களின் மனதிற்கு பிடித்த தெய்வங்களின் நினைத்து ஜெபம் தியானம் செய்யலாம். "ஓம் நமசிவாய", "ஓம் நமோ நாராயணா", "ஸ்ரீராம ஜெயம்", "ஓம் சரவணபவ" போன்ற மந்திரங்களை உச்சரிக்கலாம். சந்திர கிரகணம் முடிந்த பின்பு குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். 

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை எதுவென்றால், கிரகணம் நடைபெறும் சமயத்தில் கிரகண அலைகள் தாக்காமல் இருக்க வெளியே செல்லக்கூடாது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. கிரகண நேரத்தில் சமையல் செய்யக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. கிரகணத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் சாப்பிட வேண்டும். கிரகண சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை தொடவோ கையில் வைத்திருக்கவோ கூடாது. கிரகண சமயத்தில் சண்டை அவதூறு சொற்களை தவிர்க்க வேண்டும்.

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்?

சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை எதுவென்றால், சந்திர கிரகண நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலன் தரும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களை தற்பை புல் போட்டு வைப்பது மரபாகும். கிரகண சமயத்தில் இஷ்ட தெய்வங்களை நினைத்து ஜெபம் தியானம் செய்வது கூடுதல் பலனைத் தரும். மாணவர்கள் பாடப்புத்தகம் படிக்கலாம். 

சந்திர கிரகணம் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

சந்திர கிரகணம் முடிந்ததும் தண்ணீரில் உப்பு, மஞ்சள் மூன்று வேப்பிலை கலந்து குளித்தால் கிரகணத்தால் ஏற்பட்ட கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் மடியும். கிரகணம் முடிந்த பின் வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வழிபட நன்மை உண்டாகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் மார்ச் 13 வியாழக்கிழமை இந்த ராசிகளுக்கு பண மழை நிச்சயம்..!

மேலும் படிக்க | குரு பகவானை வசியப்படுத்த... கோடி நன்மைகளைப் பெற... சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News