Madurai Meenakshi Amman Thirukalyanam Ticket Booking 2025: மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஏப். 29ஆம் தேதி முதல் 15 நாட்கள் பெரும் திருவிழாவாக நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளாக மே 06ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 08ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 09ஆம் தேதி மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டமும் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
Meenakshi Amman Thirukalyanam: மே 8ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை பெருவிழா முக்கிய உற்சவமான திருக்கல்யாண உற்சவம் மே 8ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க உள்ள பக்தர்களுக்கான ஆன்லைன் கட்டண சீட்டு மற்றும் இலவச தரிசன அனுமதி தொடர்பாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Meenakshi Amman Thirukalyanam: கட்டண டிக்கெட் மற்றும் இலவச தரிசனம்
அதன்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500 என இரண்டு வகையான கட்டணச்சீட்டுகளும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First) என்ற அடிப்படையில் பக்தர்களை அனுமதிக்கப்பட்டுள்ளது.
Meenakshi Amman Thirukalyanam: எப்போது முன்பதிவு செய்ய வேண்டும்?
இதற்கு முன்பதிவு செய்ய https://hrce.tn gov.in என்ற இந்து அறநிலையத்துறை இணையதளத்திலும், https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற தளத்திலும் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 02ஆம் தேதி இரவு 9.00 மணி வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meenakshi Amman Thirukalyanam: ஒருவருக்கு எத்தனை டிக்கெட்டுகள்
500 ரூபாய்மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 200 ரூபாய் மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ஒரே நபர் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது.
Meenakshi Amman Thirukalyanam: ஆப்லைன் முன்பதிவு வசதி
12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டணச்சீட்டு பெற வேண்டும். பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு முன்பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆன்லைனில் மட்டுமின்றி மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Meenakshi Amman Thirukalyanam: முன்பதிவு செய்ய தேவையானவை
கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் அடையாளச் சான்றாக ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும். மேலும், தங்களது மொபைல் எண்ணுடன், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றின் விவரங்களை தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் விண்ணப்பித்துள்ள பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meenakshi Amman Thirukalyanam: டிக்கெட்டை பெறுவது எப்படி?
இதனையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட தகவல் அவர்களால் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் / மொபைல் எண்ணிற்கும் மே 3ஆம் தேதி அனுப்பப்படும். உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் மே 4 முதல் மே 6 வரையுள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி முடிய மதுரை, மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திருக்கல்யாண நுழைவு கட்டணச்சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் / குறுந்தகவலைக் காட்டி, கட்டணச் சீட்டிற்கான தொகையினை ரொக்கமாக செலுத்தி கட்டணச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்பு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meenakshi Amman Thirukalyanam: பக்தர்களின் கவனத்திற்கு...
திருக்கல்யாண நாளான (மே 8) அன்று காலை 08.35மணி முதல் 08.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
500 ரூபாய் இராஜகோபுரம் மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவார்கள். 200 ரூபாய் மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள அமைக்கப்பட்ட பாதை வழியாக வந்து வடக்கு இராஜகோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட இடங்களில் காலை 07.00 மணிக்குள் அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அட்சய திருதி அன்று இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்! வீட்டில் செல்வம் செழிக்கும்!
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2025: கெடுபலன்களை பெறும் 6 ராசிகளும்... தப்பிக்க சில பரிகாரங்களும்
மேலும் படிக்க | இன்னும் 34 நாட்கள்.. சனி ராகு ஆட்டம் ஆரம்பம்.. துஷ்ட காலம் இந்த ராசிகளுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









