)
Mahalaya Amavasya 2025: முன்னோர்கள் வழிபாடுகளுக்கு மிக சிறந்த காலமாக மகாளய பட்சம் ஆகும். அந்த வகையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம், வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட் கிழமை துவங்குகிறது. செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மகாளய அமாவாசை வருகிறது. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். மேலும், மகாளய பட்ச காலத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கன்னியாகுமரி, கோடியக்கரை, காவிரி ஆறு போன்ற புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நம் வம்சம், வாழையடி வாழையாக தழைத்தோங்குவதோடு, பித்ருக்களின் ஆசியால் மன நிம்மதியும், வாழ்க்கையில் வளமும் வந்து சேரும். அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், சில குறிப்பிட்ட திதிகளில் மட்டுமாவது செய்ய வேண்டும்.
இந்த மகாளயபட்ச அமாவாசை காலகட்டம் எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்க வல்லது. நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடம் மிகவும் முக்கியமானது. ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். எனவே ஆற்றங்கரை அல்லது கடற்கரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் எந்த காலகட்டத்தோடு செய்ய வேண்டும் என்றால், காலை நேரம் சூரியன் உதயமாகிற காலகட்டம் ரொம்ப விசேஷம்.
வீட்டுக்கு வந்து பித்துருக்களுடைய படம் வைத்து அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, அவர்களுக்கு பிடித்த பொருட்களை எல்லாம் வைத்து தீபாராதனை காண்பித்து, முறையாக வணங்கி முதல் உணவை காக்கைக்கும், இரண்டாவது உணவை அந்த ஊரில் ஏழ்மை நிலையில் இருப்பவருக்கும் கொடுத்துவிட்டு, பின் குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
மகாளபட்ச காலத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆடை தானம்
நெய் தானம்
தங்கம் மற்றும் வெள்ளி தானம்
எள்
உப்பு தானம்
பித்ரு பக்ஷத்தின் போது இந்த உரையை தவறாமல் உச்சரிப்பது நன்மை பயக்கும்
ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
பல ச்ருதி
இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்
நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி. -பித்ரு ஸ்துதி சம்பூரணம்
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ