LUCKY Zodiacs Of July 2025: ஜூலை மாதத்தில் நடைபெறும். சனியின் வக்கிரப் பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி, சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

நவகிரகங்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசிகளை மாற்றிக் கொண்டு பெயர்ச்சி ஆகும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளால், அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள்
ஜூலை மாதத்தில் ஏற்படும் சனி வக்கிர பெயர்ச்சியும், கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் பெயர்ச்சியும் நடக்க உள்ளது. இதனால் ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சனியின் வக்கிரப் பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி, சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஜூலை மாத அதிர்ஷ்ட ராசிகள்
சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், ஜூலை மாதம் 13-ஆம் தேதி, மீன ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடைகிறார். நவம்பர் 28ஆம் தேதி வரை, வக்கிர நிலையில் நீடித்து, பின்னர் வக்ர நிவர்த்தி அடைவார். அதேபோல், ஜூன் மாத கடைசியில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்வார். தற்போது ஜூன் மாதம் ஏழாம் தேதி பெயர்ச்சியான செவ்வாய், சிம்மத்தில் சஞ்சரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுசு ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
சனிபகவான் மற்றும் செவ்வாயின் அருளால், வாழ்க்கையில் பல நல் வாய்ப்புகள் எதிர்பாராமல் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல சம்பளத்தில் புரிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தற்போது பணியாற்றும் இடத்திலும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. வீடு வாங்கும் கனவு நிறைவேறலாம். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகர ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
சனிபகவான் மற்றும் செவ்வாயின் பெயர்ச்சி காரணமாக, சாதகமான பலன்கள் கிடைக்கும். முதலீட்டின் மூலம் எதிர்பாராத வகையில் நல்ல லாபம் பெறலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. மன உறுதியும் தைரியமும், முக்கிய முடிவுகள் எடுக்க காரணமாக இருக்கும். இதனால் ஆதாயமும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை எல்லாம் முடிக்க சிறந்த நேரம் எது.
மீன ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
சனிபகவான் தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஜென்ம சனி காலம் நடக்கிறது என்றாலும், சனீஸ்வரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தொழில் தொடங்க மிகவும் நல்ல நேரமாக இருக்கும். உறவுகள் மத்தியில் எனக்கும் அதிகரிக்கும். பணவரவினால் பொருளாதார நிலை உயரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ