)
Sevvai peyarchi Palangal: செவ்வாய், கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படுகிறார். நிலம், வீடு, வீரம், துணிச்சல், வலிமை, தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவாய் விளங்குகிறார்.
டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி செவ்வாய்க்கும் குருவுக்கும் இடையில் சமசப்த யோகத்தையும் உருவாக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி இது ஒரு சுப யோகமாக கருதப்படுகின்றது.
தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். செவ்வாயின் இந்த பெயர்ச்சி மிதுனம், கடகம் உள்ளிட்ட ஐந்து ராசிகளின் தைரியத்தையும் வலிமையையும் அதிகரிக்கும். வணிகங்கள் லாபத்தையும் வங்கி இருப்பையும் அதிகரிக்கும். ஜனவரி 16 ஆம் தேதி வரை செவ்வாய் தனுசு ராசியில் இருப்பார். பல ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கணிசமான லாபத்தைக் காண வாய்ப்புள்ளது. செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சியால் அதிக பயனடையப் போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் புத்தாண்டு பரிசாக நல்வாழ்வைத் தருவார்.
தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். புதிய வணிகத் திட்டங்கள் அதிக லாபம் ஈட்டித் தரும். இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகலை அளிக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுகு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். இந்த காலத்தில் நிதி நிலை மேம்படும்.
செவ்வாய் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை பயக்கும். டிசம்பர் 7 முதல், உங்கள் பணியிடத்தில் லாபத்திற்கான ஏராளமான வாய்ப்புகளை அனுபவிப்பீர்கள். நீண்டகால கடன்கள் நீங்கும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவும். உங்கள் வசதிகளை மேம்படுத்த நீங்கள் சிறிது பணத்தையும் செலவிடலாம். எதிரிகளை தோற்கடிப்பீர்கள். உங்கள் ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தால் வெற்றி காண்பீர்கள். வணிகத் துறையில் சில முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம், முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பொற்காலமாக இருக்கப் போகிறது. துலாம் ராசியின் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலையையும் சவாலையும் நீங்கள் எளிதாக சமாளித்து வெற்றிப் பாதையில் முன்னேறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். மரியாதை மற்றும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. பயணம் செய்வதற்கான வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கக்கூடும், இது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். முக்கியமான பணிகளில் வெற்றியையும் தொழில்முறை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். அரசியல் துறையில், அரசு மற்றும் அரசாங்கத்துடனான உங்கள் நெருக்கம் அதிகரிக்கும், இது புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ள உங்களை அனுமதிக்கும். நிதி ஆதாயங்கள் ஏற்படும், உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களுடனான உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். வேலையில் உங்கள் சக ஊழியர்களும் உங்களைப் புகழ்வார்கள். அதிகாரத்தைப் பெறுவீர்கள், வாழ்க்கையில் இனிமையான அனுபவங்களை அனுபவிப்பீர்கள்.
செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். டிசம்பர் 7 முதல் ஜனவரி 16 வரையிலான காலம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். எதிர்பாராத வணிக லாபங்கள் சாத்தியமாகும், இது உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஒரு புதிய இடம் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். இது புதிய அனுபவங்களை வழங்கும், வெற்றிக்கான கதவைத் திறக்கும். பதவி உயர்வு மற்றும் அதிகரித்த வருமானத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
வாழ்வில் துணிச்சலுடன் செயல்பட்டு, புதிய உச்சங்களை தொட "ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்" என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயனம் செய்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ