பூச நட்சத்திரத்திற்கு மாறும் செவ்வாய்! விரைவில் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை..

Mars Transit To Pushya Nakshatra : செவ்வாய், பூச நட்சத்திரத்திற்கு மாறுவதையொட்டி, 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை அமையப்போகிறது. அந்த ராசிகள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 10, 2025, 06:39 PM IST
  • பூச நட்சத்திரத்திற்கு மாறும் செவ்வாய்..
  • 3 ராசிகளுக்கு பலத்த பலன்..
  • யார் யார் தெரியுமா?
பூச நட்சத்திரத்திற்கு மாறும் செவ்வாய்! விரைவில் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை..

Mars Transit To Pushya Nakshatra : ஜோதிடத்தின் படி, இருக்கும் கிரகங்களில், ஆளுமை அதிகம் நிறைந்த கிரகமாக கருதப்படுவது செவ்வாய். இவர், வீரம், வலிமை மற்றும் மன தைரியத்திற்கு பெயர் பெற்றவர். இவர், விருச்சிகம் மற்றும் மேஷம் ஆகிய ராசிகளுகு அதிபதியாக விளங்குகிறார்.

Add Zee News as a Preferred Source

செவ்வாய், தற்போது சந்திரனின் கடக ராசியில் இருக்கிறார். இவர், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வேறு நட்சத்திரத்திற்கு மாற இருக்கிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியானது அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவர் மாறுவது, பூச நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கு அதிபதியாக சனி பகவான் இருக்கிறார்.

சனி பகவான் அதிபதியாக விளங்கும் பூச நட்சத்திரத்திற்கு செவ்வாய் பெயர்ச்சியாவதால், இதன் தாக்கம் பிற ராசிகளுக்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக சில ராசிகளுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டப்போவதாக கூறப்படுகிறது. அவ்வாறான நண்மைகள் பதவி உயர்வாகவோ, பணி மாற்றமாகவோ, செல்வ செழிப்பாகவோ இருக்கலாம். அப்படி, அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் தெரியுமா?

விருச்சிகம்:

செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அதிலும், தொழில் செய்து வருபவர்கள் அவர்களின் தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம் என்றும், அவர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சிரிதாகவோ பெரிதாகவோ கடை வைத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.  கொடுத்த கடன் திரும்ப வருவதற்கும், வீடு வாங்க வேண்டுமென நினைப்பவர்கள் அதற்கு பாசிடிவான அடிகளை எடுத்து வைப்பார்களாம். பரம்பரை சொத்துகளாலும், முன்னர் செய்து வைத்திருந்த முதலீடுகளாலும் நல்ல பலன் ஏற்படலாம்.

துலாம்:

செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால், துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு சாதகமான சூழல் அமையலாம். இவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும், புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி இவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் என்றும், சமுதாயத்தில் இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பிறகு, நல்ல அந்தஸ்துக்கு செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு, உயர் இடத்தில் இருந்து ஆதரவுகள் பெருகும் என்றும், பல காலங்களாக கையில் கிடைக்காமல் இருந்த பணம், கண்டிப்பாக கைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. நிதி நிலையை பெருக்க, இவர்களுக்கு பிற வணிகர்களின் உதவி தேவைப்படும் என்றும், அந்த உதவிகள் எளிதாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மீனம்:

செவ்வாய் பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவித நல்ல மாற்றங்கள் ஏற்பட போகிறதாம். இதையடுத்து, திடீர் நிதி ஆதாயங்கள் அவர்களை திக்கு முக்காட செய்யும் என்றும், இதனால் அவர்களின் வாழ்க்கை மேம்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ராசிக்கொண்ட மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்குவார்கள் எனவும், சிலருக்கு பல நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிதாக திருமணம் ஆனவர்களின் இல்லற வாழ்க்கை சிறந்து, அவர்கள் குழந்தை பாக்கியத்தை பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி பெறவும், காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வாய்ப்புள்ளது. இனி, இவர்களின் தொட்ட காரியம் துலங்கி, அமோகமான விஷயங்கள் நடைபெறுமாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News