)
Sukran Peyarchi Palangal: ஒன்பது கிரகங்களில், குருவும் சனியும் மிக பிரபலமாக இருந்தாலும், அசுரர்களின் குருவான சுக்கிரனின் பங்கும், கிரகங்களின் இளவரசரான புதனின் பங்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
புதன் பேச்சாற்றல், புத்திசாலித்தனம், தர்க்கம், கணிதம் மற்றும் வணிகத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். அவர் மிதுனம் மற்றும் கன்னியின் அதிபதியாக உள்ளார். சுக்கிரன் அழகு, மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாகக் கருதப்படுகிறார். அவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக உள்ளார். மீனத்தில் உச்சம் பெற்றுள்ள சுக்கிரனின் கன்னி ராசியில் நீச்சமாக உள்ளார்.
லட்சுமி நாராயண ராஜயோகம்
தற்போது புதன் கடகத்தில் உள்ளார். அவர் ஆகஸ்ட் 30 வரை கடகத்திலேயே இருப்பார். ஆகஸ்ட் 21 அன்று, சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. அந்த நாளில் சுக்கிரன் கடகத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சந்திரனின் ராசியான கடகத்தில் புதன் சுக்கிரனின் சேர்க்கை லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இது 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இவர்களுக்கு இந்த காலம் பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள்
கடகம் (Cancer)
லட்சுமி நாராயண ராஜயோகத்தின் உருவாக்கம் கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். கூட்டுத் தொழில் மூலம் அதிக நன்மை கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும். நிதி நிலை வலுவாக இருக்கும். வருமானமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு அற்புதமான திருமண வாழ்க்கை அமையும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கன்னி (Virgo)
சுக்கிரன் பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவான லட்சுமி நாராயண ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சொகுசு வாழ்க்கை சாத்தியமாகும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். முதலீட்டிலிருந்து நன்மைகளைப் பெறலாம். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். சில பழைய ஆசைகள் நிறைவேறும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio)
சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு மங்களகரமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டிருக்கும் பணம் இப்போது மீண்டும் கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். முதலீடு லாபகரமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீரென பெரிய லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தம் அல்லது ஆர்டர் கிடைக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறும் காலம் இது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாரம் உண்டாகும்.
லட்சுமி நாராயண ராஜயோகம் என்றால் என்ன?
ஜோதிடத்தில், லட்சுமி நாராயண ராஜயோகம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அது மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படுகிறது. புதனும் சுக்கிரனும் ஒரு ராசியில் ஒன்றாக இணையும்போது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. எந்த ராசிகள் மீதெல்லாம் இந்த யோகத்தின் நேர்மரையான தாக்கம் உள்ளதோ, அவர்கள் லட்சுமி அன்னையின் ஆசிகளைப் பெறுவார்கள். செல்வமும், செழிப்பும் அதிகரிக்கும், வாழ்வில் வெற்றிகள் குவியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ